உங்க லேப்டாப் அதிகமா சூடேறுதா?? அதனை தடுக்க இதோ ஈசி டிப்ஸ்!!

0
83

உங்க லேப்டாப் அதிகமா சூடேறுதா?? அதனை தடுக்க இதோ ஈசி டிப்ஸ்!!

நாம் அதிக நேரம் கணினியை பயன்படுத்துவதால் அது அதீத வெப்பமடையும். இதனால் அதிலிருந்து அதிக அளவுக்கு வெப்பம் வெளியேறும். இதனை தடுக்க பல வழிமுறைகள் உள்ளது. மேலும் கணினியில் உள்ள சில சாப்ட்வேர் காரணங்களாலும் கணினி விரைவிலேயே வெப்பமடையும்.

இதனை தடுக்க தற்பொழுது டெக்னாலஜி உலகத்தில் பல வழிகள் உள்ளது. ஏசி உள்ள அறையில் லேப்டாப் வைத்து வேலை செய்யும் பொழுது அதிலிருந்து வரும் சூட்டை கட்டுப்படுத்த முடியும்.

மேலும் சில காரணங்களாலும் லேப்டாப் விரைவிலேயே சூடேறும். குறிப்பாக சிப் ஐ சி சர்க்யூட் போர்ட் ஆகியவற்றில் உருவாகும் வெப்பம் அதனை வெளியேற்றுவதற்கான ஓர் மோட்டார் ஃபேன் உள்ளது.

இதில் ஏதேனும் தோசை குப்பை போன்றவை காணப்பட்டாலும் அதீத வெப்பத்தை வெளியேற்றும். அதனால் நாம் அவ்வபோது அதில் உள்ளவற்றை சுத்தம் செய்து வைப்பதன் மூலம் வெப்பத்தை குறைக்கலாம்.

இல்லையென்றால் இதனை சுத்தப்படுத்துவதற்கு என்று லேப்டாப் வாக்யூம் கிளீனர் உள்ளது அதனை வாங்கி உபயோகிக்கலாம்.

சில சமயங்களில் நாம் லேப்டாப்பை அப்படியே டேபிள் மேல் வைத்து உபயோகிக்கும் போது காற்று வெளியே போக முடியாமல் சூடேறும். அதனால் லேப்டாப் வைப்பதற்கு முன் அதற்கு கீழே ஏதேனும் காற்று போகும் அளவிற்கு பொருட்கள் வைத்து உபயோகிப்பது மூலம் லேப்டாப் சூடேறுவதை தடுக்கலாம்.

இதையெல்லாம் விட ஆன்லைனில் லேப்டாப் கூலிங் பேட் என்பது கிடைக்கிறது. இது யூஎஸ்பி மூலம் இயங்குகிறது. இதனை வாங்கியும் நாம் பயன்படுத்தலாம்.