100 கோடி என்பது வெறும் எண் அல்ல! பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்!

0
75

உலகம் முழுவதும் கடந்த 2019ஆம் ஆண்டு கொரோனா நோய் தொற்று பரவ தொடங்கியது தொடக்கத்தில் சீன நாட்டு வூஹான் நகரில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் தொற்று பின்னர் அங்கிருந்து உலகம் முழுவதும் மெல்ல, மெல்ல, பரவத்தொடங்கியது.

இதனால் சீனாவிற்கு உலக நாடுகள் அனைத்தும் கடுமையான கண்டனங்களை பதிவு செய்தனர் அதோடு ஐநா சபையில் சீனாவிற்கான கண்டனம் தெரிவிக்கப்பட்டது, உலகம் முழுவதும் இந்த நோய்தொற்று பாதிப்பினால் பல கோடி நபர்கள் பாதிக்கப்பட்டார்கள். அதிலும் இன்று வரையில் இந்த நோய் தொற்றினால் அதிக பாதிப்பை சந்தித்து இருப்பது உலக வல்லரசு நாடான அமெரிக்கா தான், உலக வல்லரசு நாடாக விளங்கி வரும் அமெரிக்காவை அந்த இடத்தில் இருந்து விலக்கி வைத்துவிட்டு அமெரிக்கா தற்போது இருக்கக்கூடிய இடத்திற்கு வந்து விட வேண்டும் என்று சீனா கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தான் இந்த வைரஸ் தொற்றை உலகம் முழுவதும் சீனா பரப்பி விட்டது என்று உலக நாடுகள் அனைத்தும் பரவலாக பேச தொடங்கியிருக்கின்றன.

இந்த சூழ்நிலையில், சீன நாட்டில் இந்த நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக சீனா அந்த நாட்டில் சுமார் 100 கோடி மக்களுக்கு இந்த தடுப்பு ஊசிகளை செலுத்தி சாதனை படைத்தது.சீனாவின் இந்த சாதனையை தற்போது இந்தியா முறியடித்து இருக்கிறது இதனை தொடர்ந்து நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 10 மணி அளவில் இதுதொடர்பாக உரையாற்றினார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது இந்தியாவின் தடுப்பூசி திட்டம் அறிவியல் அடிப்படையில் வகுக்கப்பட்டது ஆரம்பத்தில் தடுப்பூசி தொடர்பான பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டது. அது எல்லாவற்றிற்கும் தற்சமயம் விடை கிடைத்து விட்டது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்திருக்கிறார். 100 கோடி நபர்களுக்கு தடுப்பூசி என்ற இமாலய இலக்கை இந்தியா தற்சமயம் இருக்கிறது தடுப்பூசி போட தொடங்கி ஒன்பது மாதங்களில் 100 கோடி தடுப்பூசியை இந்தியா நிறைவு செய்திருக்கிறது இந்த சூழ்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றி இருக்கிறார்.

அந்த சமயத்தில், அவர் தெரிவித்ததாவது 100கோடி தடுப்பூசி என்பது ஒரு புதிய சாதனையின் ஆரம்பம் நேற்று மிகப்பெரிய சாதனையை நாம் படைத்து இருக்கின்றோம் நாட்டு மக்களுடைய கூட்டு முயற்சியின் காரணமாக தான் நூறு கோடி தடுப்பூசி சாதனையை நம்மால் செய்ய முடிந்தது. இந்த சாதனையின் மூலமாக இந்தியா புதிய சரித்திரம் படைத்திருக்கிறது இந்தியாவின் தடுப்பூசி திட்டம் உலக அளவில் ஒப்பிட்டு பார்க்கப்படுகின்றது. இதற்காக நாட்டு மக்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என கூறியிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த சாதனைக்கு பின்னால் 130 கோடி நாட்டு மக்கள் சக்தி இருக்கிறது. இந்தியா ஒரு சக்தி மிக்க நாடு என்பது மீண்டும் நிரூபணமாகியிருக்கிறது நூறுகோடி தடுப்பூசி சாதனை ஒவ்வொரு இந்தியரின் வெற்றி கதை நூறு கோடி தடுப்பூசி என்பது வெறும் எண் அல்ல அது புதிய அத்தியாயத்தின் ஆரம்பம். நோய்த்தொற்று தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் இந்த சாதனை பதில் தந்து இருக்கிறது என தெரிவித்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

தடுப்பூசி போட்டுக் கொள்வது முக்கிய நபர்களின் முன்னுரிமை என்பது ஆரம்பத்தில் இருந்து தவிர்க்கப்பட்டது, தடுப்பூசி திட்டத்தில் முக்கிய நபர்கள் கலாசாரம் தலைதூக்க விடாமல் பார்த்துக் கொண்டோம். கடைக்கோடி மக்களுக்கும் தடுப்பூசி சென்று சேர்வதை மத்திய அரசு உறுதி செய்திருக்கிறது, தடுப்பூசி திட்டம் ஆரம்பித்தபோது அது தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டது. ஆனாலும் அது எல்லாவற்றிற்கும் தற்சமயம் விடை கிடைத்திருக்கிறது. இந்தியாவின் தடுப்பூசி திட்டம் முற்றிலுமாக அறிவியலின் அடிப்படையில் வழங்கப்பட்டது என்று அவர் உரையாற்றி இருக்கிறார்.