ஜார்க்கண்ட் மாநில அரசு அதிரடி நடவடிக்கை – அரசு ஊழியர்களுக்கு புதிய கட்டளை!

0
55

ஜார்கண்ட் மாநிலத்தில், மக்கள் எந்த வகையிலும் புகையிலையை உட்கொள்ளாத மண்டலமாக மாற்றுவதற்கு அம்மாநில அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது அம்மாநில அரசு புதிதாக ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. 

அது என்னவென்றால், அம்மாநிலத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் எவ்வித வகையிலும் புகையிலையை உட்கொள்ள மாட்டோம் என்று எழுத்துப்பூர்வமாக உறுதிமொழி பத்திரத்தில் கையொப்பமிட வேண்டுமாம். இந்த புதிய கட்டளையை அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

அதாவது புகையிலையை புகைக்கும் மற்றும் உண்ணும் ஆகிய வகைகளில் அரசு ஊழியர்கள் யாரும் உபயோகிக்க கூடாது என்பதை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது அம்மாநில அரசு. அரசு அலுவலகங்களையும் மற்றும் தனியார் நிறுவனங்களையும் புகையிலை உபயோகிக்காத ஊழியர்கள் கொண்டு செயல்படும் மண்டலங்களாக மாற்ற அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும் புதிதாக பணிக்கு விண்ணப்பிப்போரும் எவ்வித வகையிலும் புகையிலையை உபயோகிப்பது இல்லை என்று உறுதியளித்தல் வேண்டும் என்றும் அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அத்துடன் மேற்கூறிய அனைத்தும் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்று திட்டவட்டமாக அப்மாநில அரசு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Parthipan K