மூட்டு வலி தாங்க முடியலையா?? சட்டுன்னு நிவாரணம் கிடைக்க இதை செய்யுங்கள்!!

0
69

மூட்டு வலி தாங்க முடியலையா?? சட்டுன்னு நிவாரணம் கிடைக்க இதை செய்யுங்கள்!!

இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் ஏதேனும் ஒரு வலி இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதற்கு நம்முடைய உணவு பழக்கம், வாழ்க்கை முறை, பணிச்சூழல் உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை முதியவர்களுக்கு தான் மூட்டு வலி வரும் என சொல்வார்கள். ஆனால் இப்போது இளம்தலைமுறையினருக்கு கூட அந்த பிரச்சனை இருக்கிறது.

இது மாதிரியான மூட்டு வலி, முதுகு வலி, இடுப்பு வலி, கை, கால் வலி ஆகியவற்றிற்கு நம் உடலில் சத்துக்கள் போதுமான அளவில் இல்லாமல் இருப்பதும் காரணமாக மருத்துவர்களால் சொல்லப்படுகிறது.

கால்சியம் குறைபாடு, இரும்பு சத்து குறைபாடு, சில வைட்டமின்களின் (வைட்டமின் டி3) பற்றாக்குறை நமக்கு உடலில் பலவீனத்தை ஏற்படுத்துகிறது. அதனால் முறையான ஊட்டச்சத்து உள்ள உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு வலி ஏற்படும் போது பெரும்பாலானோர் மாத்திரைகள் சாப்பிட்டால் சரியாகிவிடும் என்று எண்ணி மருத்துவரை அணுகாமலேயே மாத்திரை சாப்பிட்டு விடுகிறார்கள்.

ஆனால் அது மிகவும் தவறானது. அதைவிட எந்தவித பக்க விளைவுகளும் இன்றி இதனை வீட்டு வைத்தியம் மூலம் சரி செய்ய முடியும்.

தேவையான பொருட்கள்

வெந்தயம்

வெற்றிலை

விளக்கெண்ணெய்

செய்முறை

முதலில் வெந்தயத்தை ஒரு நாள் முழுவதும் ஊற வைக்க வேண்டும். நன்கு ஊறிய வெந்தயத்தை மிக்ஸி ஜாரில் போட்டு மைய அரைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு வெற்றிலையை எடுத்து சுத்தமாக கழுவிய பின்பு உரலில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு இடித்துக் கொள்ளவும்.

பின்பு ஒரு கடாயில் மூன்று ஸ்பூன் விளக்கெண்ணெய் ஊற்றி அதில் வெற்றிலை மற்றும் அரைத்து வைத்த வெந்தயத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு ஐந்து நிமிடம் கழித்து இறக்கி சிறிது ஆற வைத்த பின்பு எந்த பகுதிகளில் எல்லாம் வலி ஏற்படுகிறதோ அந்த இடத்தில் எல்லாம் நன்கு தேய்த்து விட வேண்டும்.

இவற்றை நீங்கள் வாரத்திற்கு 2 முறை தொடர்ந்து இரண்டு மாதங்கள் செய்தாலே போதும் இந்த வலி உங்களை விட்டு நீங்கிவிடும்.

author avatar
Parthipan K