இனி தேவையில்லை என்று தூக்கிப் போட்ட துருப்புச்சீட்டு! அதிமுகவிற்கு வினையாக மாறியது அதிர்ச்சியில் தலைமை!

0
102

அதிமுகவின் கொள்கை கோட்ப்பாடுகளுக்கு இடையூறாக செயல்ப்பட்ட காரணத்தால், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தை சார்ந்த ராஜன் நாகர்கோவில் தொகுதி மாவட்ட கழக துணைச் செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட கழக இணைச் செயலாளர் கிருஷ்ணகுமார், தோவாளை ஒன்றிய கழக முன்னாள் செயலாளர் மாடசாமி, ஆரல்வாய்மொழி பேரூராட்சி கழகச் செயலாளர் மோசஸ் ராமச்சந்திரன் தோவாளை தெற்கு ஒன்றிய கழக அவைத்தலைவர் தென்கரை மகாராஜன் தோவாளை வடக்கு ஒன்றிய கழக பொருளாளர் பாலசுப்பிரமணியன் என்கிற சுதாகர், தோவாளை தெற்கு ஒன்றிய இளைஞர் பாசறை இளம் பெண்கள் பாசறை செயலாளர் செல்வி, உள்ளிட்டோர் அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டு இருக்கிறார்கள்.

மற்றும் தோவாளை வடக்கு ஒன்றிய கழக மாவட்டப் பிரதிநிதி காஞ்சி தோமினிக், கழக இலக்கிய அணித் துணைச் செயலாளர் வரதராஜன், மாவட்ட இளைஞர் பாசறை இளம் பெண்கள் பாசறை இணைச் செயலாளர் உள்ளிட்டோர் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப் படுகிறார்கள் என்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் உள்ளிட்டோர் கூட்டாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார்கள்.

இந்த சூழ்நிலையில், கன்னியாகுமரியின் அதிமுக கிழக்கு மாவட்ட பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மற்றும் நீக்கப்படாத நிர்வாகிகள் என்று மொத்தமாக இன்று மாலை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுடைய முன்னிலையில் ,திமுகவில் இணைவதாக சொல்லப்படுகிறது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநில இலக்கிய அணி துணைச் செயலாளர் நாஞ்சில் தோமினிக் தெரிவித்ததாவது, நாங்கள் இன்று மாலை திமுகவில் இணை இருக்கின்றோம் இது தெரிந்துதான் அதிமுகவில் இருந்து எங்களை வைத்திருக்கிறார்கள் என்று சொல்லியிருக்கிறார்.

அதிமுக எங்களுக்கு பிடிக்காத கட்சியாக மாறிவிட்டது. அந்த கட்சி பாஜகவின் பிடியில் இருக்கிறது நாம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் ஈர்க்கப்பட்டு அதிமுகவிற்கு வந்து சேர்ந்தேன். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்களை நம்பி  பயணம் செய்தேன் ஓபிஎஸ் மண் குதிரையாக மாறி இருக்கிறார். ஓபிஎஸ், இபிஎஸ் என்ற இரண்டு மண்குதிரைகளை நம்பி நான் வரவில்லை இதெல்லாம் எனக்கு பிடிக்கவில்லை. ஆகவே திமுகவில் இணைய இருக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.