கட்சியிட்ட கட்டளை! முதல்வர் பதவியை ராஜினாமா செய்த எடியூரப்பா!

0
69

பாஜகவின் விதிகள்படி 75 வயதை தாண்டிய தலைவர்களுக்கு கட்டாயமாக ஓய்வு அளிக்கப்பட்டு வருகிறது. இதனை பா ஜ க ஆரம்ப காலத்திலிருந்தே கடைபிடித்து வருகிறது. ஆனால் 76 வயதாகும் சமயத்தில் எடியூரப்பா கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராக சென்ற 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26ஆம் தேதி நான்காவது முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.

அவருக்கு 75 வயதை கடந்து விட்ட படியால் எடியூரப்பாவுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டு முதலமைச்சர் பதவியை பாரதிய ஜனதா கட்சியின் மேலிடம் கொடுத்தது. முதலமைச்சர் பதவியை வழங்கிய சமயத்திலேயே இரண்டு வருடங்கள் முடிந்தவுடன் முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று நிபந்தனையும் போட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. கட்சி மேலிடத்தின் இந்த கட்டளையை ஏற்றுக் கொண்ட எடியூரப்பா முதலமைச்சராக பதவியேற்று இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதை அடுத்து ஒரு முக்கிய முடிவை நோக்கி கொண்டிருக்கிறார்.

அதோடு கடந்த இரண்டு மாதங்களாகவே கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியினர் முதலமைச்சர் எடியூரப்பா பதவி விலக வேண்டும் என்று தெரிவித்து வந்தார்கள் இந்த சூழ்நிலையில் கடந்த 16ஆம் தேதி தலைநகர் டெல்லி சென்ற எடியூரப்பா பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜகவின் தேசியத் தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோரை சந்தித்து ஆலோசனை நடத்தி இருக்கின்றார்.

இந்த சந்திப்பின்போது முதலமைச்சர் எடியூரப்பா தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வதாக உறுதி அளித்து இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியானது. இந்த சூழ்நிலையில், தான் முதலமைச்சராக எடியூரப்பா பொறுப்பேற்று இரண்டு வருடங்கள் நிறைவடைந்ததை தொடர்ந்து இன்று பெங்களூருவில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை கர்நாடக அரசு சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிலையில், அந்த நிகழ்ச்சியின் முடிவில் எடியூரப்பா தன்னுடைய முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததாக சொல்லப்படுகிறது.