வரப்போகும் கர்நாடக தேர்தல்!! இபிஎஸ் ஓபிஎஸ் மீண்டும் குழப்பம்!

0
174
Karnataka election!! EPS OPS Confused Again!
Karnataka election!! EPS OPS Confused Again!
கர்நாடக தேர்தல்!! இபிஎஸ் ஓபிஎஸ் மீண்டும் குழப்பம்!
கர்நாடகா மாநிலத்தில் மே 10-ம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. அம்மாநிலத்தின் பிரதான கட்சிகளான காங்கிரஸ், பாஜக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், பாஜகவுக்கு இடையேயான பரபரப்புக்கு இடையில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமியும், பன்னீர் செல்வமும் வேட்பாளர்களைக் களமிறக்குகியுள்ளனர்.
அதிமுக சார்பில் புலிகேசி நகர் தொகுதியில் போட்டியிட எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு பெற்ற அன்பரசன் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். மேலும் பன்னீர் செல்வம் தரப்பில், புலிகேசி நகர், கோலார் தங்கவயல் மற்றும் காந்திநகர் உள்ளிட்ட தொகுதிகளில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்தனர்.
நேற்று வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்ற நிலையில், புலிகேசி நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி ஆதரவு பெற்ற அன்பரசனின் மனு ஏற்கப்பட்டது. இந்த தொகுதியில் பன்னீர் செல்வம் தரப்பு வேட்பாளர் நெடுஞ்செழியனின் மனு நிராகரிக்கப்பட்டது.
இந்த நிலையில் காந்திநகர் தொகுதியில் பன்னீர் செல்வம் ஆதரவுடன் மனுத் தாக்கல் செய்த குமாரின் மனு அதிமுக வேட்பாளராகவும், கோலார் தங்கவயல் தொகுதியில் ஆனந்தராஜ் மனு சுயேச்சையாகவும், ஏற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கர்நாடகாவில் புலிகேசி நகரில் மட்டுமே அதிமுக போட்டியிடுகிறது எனவும், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் மனுவை ஏற்றுக்கொண்டுள்ளனர். இரட்டை இலை சின்னம் ஒதுக்குவதற்கான படிவத்தில் கையெழுத்திட எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது உள்ள இந்த சூழ்நிலையில் அதிமுகவின் அதிகாரபூர்வ பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கிகாரித்து உத்தரவு பிறப்பித்திருந்தாலும், கர்நாடக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் குழப்பம் விளைவிக்கும் வகையில் நடந்து கொள்வது ஏன் என்று அரசியல் பார்வையாளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.