கர்நாடக தேர்தல்! ஓபிஎஸ் ஆதரவாளர் வாபஸ்

0
135
#image_title
கர்நாடக தேர்தல்! ஓபிஎஸ் ஆதரவாளர் வாபஸ்! 
கர்நாடக சட்டமன்ற தேர்தல் வரும் 10-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில்,  காந்திநகர் மற்றும் கோலார் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த பன்னீர்செல்வம் ஆதரவு வேட்பாளர்கள் வாபஸ் பெற முடிவு செய்துள்ளனர்.
பெங்களூரூ புலிகேசி நகர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் அன்பரசன் என்பவரை வேட்பாளராக பழனிசாமி அறிவித்தார். இதற்கு போட்டியாக பன்னீர்செல்வம் தரப்பில், புலிகேசி நகரில் நெடுஞ்செழியனும், கோலார் தங்கவயலில் ஆனந்த்ராஜூம் மற்றும் காந்திநகர் தொகுதியில் குமார் என்பவரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் வேட்புமனுக்கள் பரிசீலனையில், அன்பரசன் மனு ஏற்கப்பட, பன்னீர்செல்வம் தரப்பில் களமிறக்கப்பட்ட நெடுஞ்செழியன் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. எனினும், காந்திநகர் தொகுதியில் மனுத் தாக்கல் செய்த குமாரின் மனு அதிமுக வேட்பாளராகவும், கோலார் தங்கவயல் தொகுதியில் ஆனந்த்ராஜ் மனு சுயேச்சையாகவும் ஏற்கப்பட்டது. குமார் மனு ஏற்கப்பட்டதற்கு பழனிசாமி தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே அதிமுக பெயரை பன்னீர் தரப்பினர் பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இபிஎஸ் தரப்பில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனு அளித்தனர். இதனையடுத்து, பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளருக்கு, தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அளித்தது. அதில், அதிமுக பெயரை பயன்படுத்தியது ஏன் என விளக்கம் கேட்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் பன்னீர் செல்வம் ஆதரவு வேட்பாளர்கள் குமார் மற்றும் ஆனந்த் ராஜ் தங்களது வேட்பு மனுக்களை திரும்ப பெற்றுக் கொள்ள முடிவு செய்துள்ளதாக பன்னீர் தரப்பு ஆதரவாளர் பெங்களூர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.