ராஜமெளலிக்கு பாராட்டு! மணிரத்னம் பேட்டி

0
139
#image_title
ராஜமெளலிக்கு பாராட்டு! மணிரத்னம் பேட்டி.
கல்கி எழுதிய பொன்னியின் செல்வனுக்கு திரை வடிவம் கொடுக்க எம்ஜிஆர், கமல்ஹாசன் தொடங்கி தமிழ் திரையுலகை சேர்ந்த பல்வேறு ஜாம்பவான்கள் முயன்ற போதிலும், அது நிறைவேற்ற முடியாமல் போனது. இறுதியாக இதனை ஒரு சவாலாக ஏற்ற இயக்குனர் மணிரத்னம், தமிழ் சினிமாவின் நீண்ட நாள் கனவாக இருந்த பொன்னியின் செல்வன் படத்தை நனவாக்கினார்.
இப்படத்தின் முதல் பாகம் கடந்தாண்டு ரிலீசாகி பிரம்மாண்ட வெற்றியை ருசித்தது. லைகா நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்துள்ள  இரண்டாம் பாகம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அதன்படி வருகிற ஏப்ரல் 28-ந் தேதி வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.
இதற்கான முன்பதிவும் தொடங்கி படுஜோராக நடைபெற்று வரும் இந்த வேளையில், அப்படத்தின் புரமோஷன் பணிகளையும் படக்குழுவினர் மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொன்னியின் செல்வன் படக்குழுவினர் புரமோட் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் ஐதராபாத்தில் நேற்று நடைபெற்ற பொன்னியின் செல்வன் 2 பாகத்தின் பிரம்மாண்டமான புரமோஷன் நிகழ்ச்சியில் லைகா நிறுவன தலைவர் சுபாஸ்கரன், நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், நடிகைகள் திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, இயக்குனர் மணிரத்னம் மற்றும் பொன்னியின் செல்வன் 2 படத்தை தெலுங்கு மாநிலங்களில் ரிலீஸ் செய்யும் தில் ராஜுவும் இதில் கலந்துகொண்டார்.
விழாவில் பேசிய மணிரத்னம், பொன்னியின் செல்வன் படம் உருவாக ராஜமவுலி தான் காரணம், இயக்குனர் ராஜமவுலிக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். அவர் பாகுபலியை மட்டும் எடுக்காமல் இருந்திருந்தால், பொன்னியின் செல்வனும் உருவாகி இருக்காது. அவருக்கு பெரிய நன்றி. அவரை சந்தித்தும் இதை நான் கூறினேன்.
அவர் தான் பொன்னியின் செல்வனை இரண்டு பாகங்களாக எடுக்க வழிகாட்டி உள்ளார். ஒட்டுமொத்த திரையுலகிற்கு வரலாற்று படம் எடுக்கும் ஆர்வம் பாகுபலிக்கு பின் தான் வந்துள்ளது. பல வரலாற்று கதைகளை சொல்ல அவர் தான் கதவை திறந்து வைத்துள்ளார்” என தெரிவித்தார்.