சும்மாவே அட்லீ
இந்த விஷயத்துல கில்லி.. பிகில்ல
இதெல்லாம் இருக்குன்னா கேக்கணுமா..?
தளபதி விஜய் – அட்லீ கூட்டணியின் ஹாட் டிரிக் படைப்பான ‘பிகில்’ படம் பெருத்த எதிர்பார்ப்பில் உருவாகிவருகிறது. இந்நிலையில் ‘பிகில்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ட்ராக்காக ‘சிங்கப்பெண்ணே’ பாடல் வருகிற 23ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காலையிலிருந்து
சமூக வலைத்தளங்களில் சூர்யா ரசிகர்கள் சூர்யாவின் பிறந்தநாளை அட்வான்ஸாக ட்ரெண்ட்
செய்து வந்ததாலும் அதன்பின் தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை பட பாடல் வெளியானதாலும்,
கொஞ்சம் அமைதியாக இருந்த விஜய் ரசிகர்களுக்கு
இந்த அப்டேட் இன்ப செய்தியாக அமைந்தது. அதைத்தொடர்ந்து தற்போது விஜய் ரசிகர்கள்
சலங்கை கட்டி ஆடிவருகிறார்கள்.
இந்நிலையில் இந்த
அப்டேட்டிற்காக தற்போது ஒரு போஸ்டர் வெளியாகியிருக்கிறது. முதன்முதலாக விஜய்,
பெண்கள் கால்பந்து அணியுடன் இருக்கும்படி
வெளியாகியுள்ள இந்த போஸ்டரை கொஞ்சம் உன்னிப்பாக பார்த்தால் பல விஷயங்களை
அவதானிக்கமுடிகிறது. இதில் ஒரு வீராங்கனையின் முகம் ஆசிட் வீச்சால்
பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் படத்தில் செண்டிமெண்ட் காட்சிகளுக்கு குறைவிருக்காது
என நம்பமுடிகிறது.
சும்மாவே அட்லீ
இந்த விஷயத்தில் கில்லி, ஆசிட்
வீச்செல்லாம் வேறு இருந்தால் கேக்கவா வேண்டும்..? இதை விஜய் ஸ்டைலிலேயே சொல்ல வேண்டுமென்றால் ஒருவேளை ஆசிட்
வீச்சால் பாதிக்கப்பட்ட பெண் விஜய்க்கு வேண்டப்பட்ட பெண்ணாக இருக்கலாம்.. அந்தப்
பெண்ணுக்கு ஆசிட் வீசியவனை விஜய் தண்டிக்கலாம்.. அதைத்தொடர்ந்து விஜய்க்கு வேறு
வேறு பிரச்சனைகள் கிளம்பலாம்..
திமுக கொடுத்த பொய் வாக்குறுதிகளை நம்பி மக்கள் ஏமாந்து போய் வாக்களித்து விட்டனர் என முதல்வர் கூறியுள்ளார். அவர் கூறியது
கடந்த மக்களவை தேர்தலில் திமுக நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கொடுத்ததாகக் குற்றம்சாட்டிய முதலமைச்சர், அவர்கள் அளித்த கல்வி கடன் ரத்து, விவசாய கடன் ரத்து, நகைகடன் ரத்து, மாதம் 6000 ரூபாய் வழங்கப்படும் என நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து வெற்றி பெற்றது. இது நிறைவேற்ற முடியுமா? இனி அவர்களால் என்ன வாக்குறுதிகளை அளிக்க முடியும் என்றும் கேள்வியெழுப்பினார்.
சட்ட சபை கூட்டத்தொடர் முடிந்து அடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமானம் மூலம் நேற்றிரவு கோவை சென்றார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், என்.ஐ.ஏ சட்டத் திருத்தம் குறித்த கேள்வி எழுப்பிய செய்தியாளர், மக்களை பாதுகாக்க எந்த சட்டம் கொண்டுவந்தாலும் அதனை அரசு ஆதரிக்கும் எனக் கூறிய முதலமைச்சர் . இது மக்களுக்கான ஆட்சி மக்கள் விரும்பாத எதையும் இந்த ஆட்சி செய்யாது எனவும் தெரிவித்தார்.
மேலும் பேசியதாவது, கடந்த மக்களவை தேர்தலில் திமுக நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கொடுத்ததாகக் குற்றம்சாட்டிய முதலமைச்சர், இனி அவர்களால் என்ன வாக்குறுதிகளை அளிக்க முடியும் என்றும் கேள்வியெழுப்பினார். பொய் பிரச்சாரம் செய்து மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்று வெற்றி பெற்றது. நாங்கள் அப்படி எந்த பொய்யான வாக்குறுதிகளை அளிக்கவில்லை. நிறைவேற்ற கூடிய வாக்குறுதிகளை மட்டுமே இந்த அரசு அளிக்கும் என்று கூறினார்.
மேலும் மாணவி ஒருவர் குத்து சண்டை போட்டியில் அனுமதிக்க படாததால் தற்கொலை செய்து கொண்டார். இதை கண்டித்து மாணவியின் பெற்றோர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் மனு அளித்தனர். அதாவது குத்து சண்டையில் இடம் தரமறுத்த கல்லூரி நிர்வாகத்தின் மேல் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்கள். இந்த மனுவைப் பெற்றுக்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இது மக்களுக்கான ஆட்சி எனவும் இது மக்கள் விரும்பாத எதையும் செய்யாது எனவும் தெரிவித்தார். திமுக தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து வெற்றி பெற்றது. அந்த வாக்குறிதகள் என்றுமே நிறைவேற்ற முடியாது என அவர் கடுமையாக குற்றம் சாட்டினர்.
தமிழகத்தில் அடுத்த முதல்வர் இவரா? ஆம் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுடன் மதிமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தை போன்ற கூட்டணிகளுடன் திமுக மதசார்பற்ற கூட்டணி என்று தமிழகத்தில் போட்டி இட்டது. இதற்க்கு எதிர் அணியில் மெகா கூட்டணி என அழைக்கப்படும் அஇஅதிமுக உடன் பாட்டாளி மக்கள் கட்சி, தேமுதிக, தமிழ்மாநில காங்கிரஸ், பிஜேபி, போன்ற கட்சிகளுடன் இணைந்து மெகா கூட்டணியாக நாடாளுமன்றம் மற்றும் இடைத்தேர்தலை சந்தித்தனர்.
இந்த தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் 37 நாடாளுமன்ற தொகுதிகளை பெற்று வெற்றி பெற்றது. ஆளும் அதிமுக கூட்டணி ஒரே இடத்தில் மட்டும் ஓபிஎஸ் மகன் தேனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் மத்தியில் மீண்டும் பிஜேபியே ஆட்சியை பிடித்து மீண்டும் இரண்டாவது முறையாக மோடி தலைமையேற்று நாட்டின் பிரதமர் ஆனார்.
இதை அடுத்து சற்றுநாட்களுக்கு முன் திமுகவின் இளைஞர் அணி தலைவராக உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஒரு மனதாக பொறுப்பேற்றார். அவர் மு.க. ஸ்டாலின் அவர்களின் மகன் என்பதற்காகவே இப்பொறுப்பை அவருக்கு வழங்கி இருக்கிறது என விமர்சனம் எழுந்தது.
இதை அடுத்து திரு உதயநிதி ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இளைஞரணிக்கு இலக்கு என்பது ஒன்றுதான். தமிழ்நாட்டில் தலைவர் மு.க.ஸ்டாலினின் ஆட்சியை மலர வைப்பது. அந்த இலக்கை அடைய இரவுபகல் பாராது உழைக்கக் கிளம்பியிருக்கும் இளம்படைக்கு வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது, அடுத்த தேர்தலில் கண்டிப்பாக திமுக வெல்லும் ஸ்டாலின் தான் முதல்வராக வருவார் என அக்கட்சியின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது பெரிதும் பேசும் பொருளாக ஆனது.
அடுத்த தேர்தலில் திமுக இளைஞர் அணி தலைவர் திரு உதயநிதி ஸ்டாலின் சொல்வது போல திமுக ஆட்சியை பிடித்து திமுக தலைவர் திரு மு.க ஸ்டாலின் அவர்கள் பொறுப்பு ஏற்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். எல்லாவற்றிற்கும் காலம் தான் பதில் சொல்லும்.
காலத்தால் அழியாத
தமிழ் மண்ணின் மனம் மாறாமல் கிளாசிக் படங்களான அழகி, சொல்ல மறந்த கதை, ஒன்பது ரூபாய் நோட்டு போன்றவற்றைத் தந்தவர் இயக்குநர் தங்கர் பச்சான். இதற்கு
முன்னதாக அவர் நாற்பதுக்கும் அதிகமான படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர்
என்பதும் குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் தங்கர்பச்சான் தனது
எழுத்துகள் மற்றும் படைப்புகள் மூலம் தமிழ்ச் சமூகம் சார்ந்த உணர்வுகளை
வெளிப்படுத்தி வருகிறவர். அவ்வப்போது தற்கால அரசியல் நிலவரங்கள் குறித்தும்
தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
இவர் பல ஆண்டுகளாக இயக்கி
வந்த களவாடிய பொழுதுகள் திரைப்படம் பல சோதனைகளுக்கு பிறகு கடந்த ஆண்டு தான்
திரைக்கு வந்தது. பல்வேறு தரப்பினரும் பாராட்டும் விதமாக படத்தை எடுத்திருந்தாலும்
தாமதமாக வந்த காரணத்தால் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.
இந்நிலையில் ஒரு
சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் படம் இயக்க தொடங்கியுள்ளார் தங்கர் பச்சான்.
அவர் இயக்கி வரும் இந்தப் புதிய படத்தில் தன் மகன் விஜித் பச்சானை ஹீரோவாக
சினிமாவில் அறிமுகப்படுத்துகிறார்.
விஜித் பச்சான், பிரபுதேவாவிடம் இரண்டு வருடங்கள் நடனப் பயிற்சியும் பிரபல சண்டைப் பயிற்சியாளர் ஒருவரிடம் சண்டை பயிற்சியும் கற்றுள்ளாராம்.
இப்படத்தில்
அவருக்கு ஜோடியாக மிலனா, அஸ்வினி ஆகியோர்
நடிக்கிறார்கள். மன்சூர் அலிகான், முனிஷ்காந்த்
ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
இது குறித்து
பேசிய தங்கர் பச்சான் படம் இந்த தலைமுறைக்கு பிடிக்கும் விதமாக இருக்கும். காதல்,
சண்டை, காமெடி, பொழுதுப்போக்கு
என எல்லாம் கலந்த அம்சமாக இருக்கும் என கூறியுள்ளார்.
சென்னையில் நடத்தவுள்ள இதன் படப்பிடிப்பை சென்னையின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி தொடங்கி வைத்தார். இந்த விழாவில் விஜித் பச்சானைப் பார்த்த அனைவரும் தங்கர் பச்சானுக்கு இவ்வளவு பெரிய பையனா என வியப்பில் ஆழ்ந்து போயிருக்கிறார்களாம்.தந்தையை போல மகனும் திரைத்துறையில் சாதிக்க வாழ்த்துக்கள்..!
வன்னியர்களால் வெற்றி பெற்ற திமுக அவர்களுக்கு செய்த துரோகம்! ஆதாரத்துடன் வெளியான தகவல்
தமிழ்நாட்டில் திமுக ஆட்சியமைக்க பலமுறை வன்னியர் சமுதாய மக்களின் வாக்குகள் தான் உதவியிருக்கின்றன என்றும் ஆனால் அந்த மக்களுக்காக திமுக தரப்பில் எதுவும் செய்யாமல் துரோகம் செய்துள்ளதாக பாமகவின் தகவல் தொழில்நுட்ப அணியின் தலைவர் அருள் ரத்தினம் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் தன்னுடைய முகநூலில் பதிவிட்டுள்ளதில் குறிப்பிட்டுள்ளதாவது.
திமுக என்கிற கட்சி தமிழ்நாட்டில் முதன்முதலில் பெரு வெற்றிபெறவும், ஆட்சி அமைக்கவும் ஆதரவாக இருந்த சமூகம் வன்னியர் சமூகம் தான். இந்த சமூகத்திற்கு திமுக துரோகம் செய்தது ஏன்?
வன்னியர்களின் 1950 அரசியல் வரலாறு
சுதந்திர இந்தியாவில் வன்னியர்களுக்கு அரசியல் சட்ட உருவாக்க சபையில் இடம் அளிக்கப்படவில்லை. பத்துலட்சம் மக்களுக்கு ஒரு அரசியல் சபை உறுப்பினர் என்கிற காங்கிரசு கட்சி அறிவிப்பை நம்பி, வன்னியர்களுக்கு 3 உறுப்பினர் இடம் வேண்டும் என்று வன்னியர்கள் தில்லிக்கு தூது சென்றனர். ஆனால், காங்கிரசு கட்சி ஒரு இடம் கூட கொடுக்கவில்லை. வன்னியர்களுக்கு மட்டுமல்ல, இந்திய மக்கள் தொகையில் பாதிக்கும் கூடுதலாக இருக்கும் இதர பிற்படுத்தப்பட்ட (OBC) பிரிவினரில் ஒரே ஒருவருக்கு கூட இடம் கொடுக்கவில்லை.
காங்கிரசுக் கட்சி வன்னியர்களைப் புறக்கணித்தது. இதனால் – விடுதலைக்கு காரணமான காங்கிரசுக் கட்சியை, இந்திய வரலாற்றில் முதல் முறையாக 1949 ஆம் ஆண்டின் உள்ளாட்சித் தேர்தலில் வன்னிய குல சத்திரிய மகா சங்கம் தோற்கடித்தது. (தென்னார்க்காடு ஜில்லா போர்டு தேர்தலில் மொத்தமிருந்த 52 இடங்களில் 22 இடங்களை சங்கம் கைப்பற்றியது).
1950 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்த இந்திய அரசியல் சாசனம் – சாதி அமைப்புகள் தேர்தலில் போட்டியிட தடை செய்ததால் – 1952 தேர்தலில் வடார்க்காடு வன்னியர்கள் ‘காமன்வீல் கட்சி’ என்ற பெயரிலும், தென்னார்க்காடு வன்னியர்கள் ‘தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி’ என்ற பெயரிலும் போட்டியிட்டு பெரும் வெற்றி பெற்றனர்.
(அப்போதைய 190 சட்டமன்ற உறுப்பினர் இடங்களில் 25 இடங்களை வன்னியர் கட்சிகள் கைப்பற்றின. இதனால், சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தலிலேயே, சென்னை மாநிலத்தில் காங்கிரசுக் கட்சி தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலையை சந்தித்தது).
காமன்வீல் கட்சி ராஜாஜியை முதலமைச்சர் ஆக்கியது. பின்னர் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி காமராசரை முதலமைச்சர் ஆக்கியது. (காங்கிரசுக் கட்சியின் வேண்டுகோளுக்கு இணங்க, வன்னியர் கட்சிகள் இரண்டையும் கலைத்துவிட்டனர்).
வன்னியர்கள் திமுகவை வளர்த்த வரலாறு
காங்கிரசை வெறுத்த வன்னியர் சமூகம் – திமுகவை வளர்த்தது. தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி சட்டமன்ற உறுப்பினரும் வன்னியர் தலைவருமான ஆ. கோவிந்தசாமி 1954 ஆம் ஆண்டில் ‘உழவர் கட்சி’ எனும் கட்சியைத் தோற்றுவித்தார். அவர் 1954 ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் காணை காஞ்சனூர் தொகுதியில் உதயசூரியனை தேர்தல் சின்னமாக வைத்து போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
பின்னர் அவரது தலைமையில் வன்னியர்கள் திமுகவில் சேர்ந்தனர். திமுக உதய சூரியன் சின்னத்தை எடுத்துக்கொண்டது. அக்கட்சி முதன் முதலில் போட்டியிட்ட 1957 தேர்தலில் 13 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அவற்றில் 10 தொகுதிகள் வன்னியர்கள் மிகப் பெரும்பான்மையாக வாழும் தொகுதிகளாகும்.
அதன் பின்னர் 1962 தேர்தல் திமுக வெற்றி பெற்ற 50 இடங்களில் மிக அதிகமானவை வன்னியர்கள் வாழும் தொகுதிகள் ஆகும். இதனை Myron Weiner எனும் அரசியல் ஆய்வாளர் தனது Politics of Scarcity நூலில் “In the 1962 elections for the Madras Legislative Assembly, a large number of Vanniyakula Kshatriyas in North and South Arcot, Trichinopoly, Tanjore and Salem supported the DMK. It was in these districts that the DMK registered most of its gains” என்று குறிப்பிட்டுள்ளார்.
இறுதியில் 1967 ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைத்த போதும் கூட – மிக அதிகமான இடங்களை வெற்றி கொண்டது வன்னியகள் ஆதரவுடன் தான்.
வன்னியர்களுக்கு திமுக செய்த துரோகம்
இவ்வாறாக, திமுக என்கிற கட்சி தமிழ்நாட்டில் முதன்முதலில் வெற்றிபெறவும், ஆட்சி அமைக்கவும் ஆதரவாக இருந்த வன்னியர் சமூகத்திற்கு திமுக செய்த நன்மைகள் என்ன? சாதாரண கட்சி மாவட்டச் செயலாளர் பதவிகளைக் கூட விகிதாச்சாரத்துக்கு ஏற்ப வன்னியர்களுக்கு கொடுக்காதது ஏன்?
மிகவும் குறைந்த பட்ச நீதியான – வன்னியர் சமூகம் உள்ளிட்ட 108 சமூகங்களுக்கு 20% இடஒதுக்கீடு பெறுவதற்கு கூட – மருத்துவர் அய்யா அவர்களின் போராட்டத்தின் மூலம் “21 உயிர்களை தியாகம் செய்த பின்னர் தான் திமுகவிற்கு மனம் இறங்கும்” என்கிற நிலை ஏற்பட்டது ஏன்?
வன்னியர்களின் அடையாளமான ராமசாமி படையாட்சியாரின் படத்தை, முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வந்து தான் சட்டமன்றத்தில் திறக்க வேண்டும் என்கிற சூழலை திமுக உருவாக்கியது ஏன்? கலைஞர் கருணாநிதிக்கோ, முக ஸ்டாலினுக்கோ இந்த எண்ணம் எழாதது ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக சட்டசபையில் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த எஸ்.எஸ் ராமசாமி படையாச்சியாரின் திரு உருவ படத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்துள்ள இந்நிலையில் இந்த தகவல் திமுகவில் உள்ள அந்த சமுதாய மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. திமுகவின் இந்த துரோகத்தை ஒவ்வொருவரும் விமர்சிக்க ஆரம்பித்து விட்டனர்.
விஜய் என்ற மூன்று எழுத்து கொண்ட இந்த சொல் தமிழ் திரையுலகில் செய்யாத சாதனைகள் இல்லை. வசூல் மன்னன் என அனைவராலும் அழைக்கப்படுபவர் தான் இவர். முன்னதாக வந்த படம் A.R. முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த படம் சர்கார் ஆகும். அது பல விமர்சனங்களும் பல கட்சிகளின் எதிர்ப்புகளும் பெற்றாலும் வசூல் ரீதியாக பெரிய வெற்றி பெற்றது.
அதை தொடர்ந்து இயக்குனர் அட்லீ இயக்கத்தில் முறையாக இணைந்துள்ள படம் பிகில். இதற்கு முன்னர் அட்லீ இயக்கத்தில் தெறி, மெர்சல் இப்படங்கள் ஹிட் ஆன படங்கள் ஆகும். இதை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். பெண்கள் காலபந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் பயிற்சியாளராக நடிக்கிறார் விஜய்.
விஜயின் 63-வது படமாக உருவாகி வரும் இந்தப் படத்தின் டைட்டிலும், ஃபர்ஸ்ட் லுக்கும் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. டிவிட்டர் பக்கத்தில் இந்திய அளவில் பிரபலம் அடைந்தது.
இதைத்தொடர்ந்து படத்தில் இடம்பெற்ற சிங்கப் பெண்ணே என்ற பாடல் இணையத்தில் கசிந்தது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில் சிங்கப் பெண்ணே பாடல் 23-ம் தேதி வெளியாகும் என்று படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அறிவித்துள்ளார்
இதுகுறித்த தனது ட்விட்டர் பதிவில், ‘இந்தப் பாடல் நாட்டின் அனைத்து மகள்களுக்கும் சமர்ப்பணம்’ என்றும் அர்ச்சனா கல்பாத்தி கூறியுள்ளார். படக்குழுவின் இந்த அறிவிப்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. சர்கார் படம் போலவே இப்படமும் வெற்றி அடைய வேண்டும். வாழ்த்துக்கள். 23 ஆம் தேதி ரசிகர்களுக்கு விருந்து தான்.
தல என்றால் அனைவரும் அறிந்ததே. அஜித் என்ற ஒற்றை மனிதரை தமிழ் திரையுலகம் மற்றும் ரசிகர்கள் என்றும் மறக்கமாட்டார்கள். அவருக்கே தனி ஒரு குணம் உண்டு அவர் பல தோல்வி வெற்றி படங்களை கொடுத்தாலும் அவருடைய தன்னம்பிக்கை அவரை விட்டுகொடுத்தது இல்லை என்பதே உண்மை.
தல அஜித்தின் நடிப்பில் முன்னதாக வெளிவந்த விஸ்வாசம் படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மெகா வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து H.வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ள நிலையில் அஜித் தனது ரசிகர்களுடன் இன்று செல்பி எடுத்துகொண்டுள்ளார்.
இதுவரை ரசிகர்களே அஜித்தை பொதுவெளியிலோ அல்லது நிகழ்ச்சிகளிலோ புகைப்படம் எடுத்துவந்த நிலையில் முதன்முறையாக ரசிகர்கள் அனைவரையும் க்ரூப்பாக நிற்க வைத்து செல்பி எடுத்து கொண்டுள்ளார் நமது தல.
ஆனால் இதிலும் ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது. அதாவது அஜித்திடம் பேஸிக் மொபைல் தான் உள்ளதாக அவரது ரசிகர்கள் இந்நாள் வரை கூறி வருகின்றனர். அப்படியென்றால் இந்த மொபைல் எப்படி வந்தது? என மற்ற ரசிகர்கள் கேள்வி எழுப்ப, இது லக்கி ரசிகன் சந்தோஷ்ராஜ் என்பவரின் மொபைல் போனாம்.
எது என்னவோ தலையே நம்மை வைத்து ஒரு செல்ஃபி எடுத்து விட்டார் என்பதில் பெரும் சந்தோசத்தில் உள்ளன அவரது ரசிகர்கள். முந்தைய படம் விஸ்வாசம் போலவே வினோத் இயக்கத்தில் அடுத்த மாதம் வெளிவரவிருக்கும் நேர்கொண்ட பார்வையும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
தோனிக்கு ஓய்வு! ராணுவ பணிகளில் கவனம் செலுத்த போவதாக அறிவிப்பு
சமீபத்தில் நடந்து முடிந்த உலகக்கோப்பை 2019 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடி முதலிடத்தை பிடித்திருந்தது. ஆனால், எதிர்பாராத விதமாக அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்து தொடரைவிட்டு இந்திய அணி வெளியேறியது.
உலகக்கோப்பை போட்டியில் அடைந்த தோல்விக்குப் பிறகு தோனியின் ஓய்வு குறித்து தான் கிரிக்கெட் வீரர்களிடையேயும், ரசிகர்களிடையேயும் பெரும் விவாதமாக இருந்து வருகிறது. தினமும் இவரது ஓய்வு குறித்த செய்திகள் வந்த வண்ணமே உள்ளன. ஆனால், தோனி தரப்பில் இந்த விவாதம் மற்றும் வதந்திகள் குறித்த எந்தப் பதிலும் இதுவரை வரவில்லை.
அதேநேரம் இந்திய அணி அடுத்ததாக மேற்கிந்தியத் தீவுகள் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது. இந்தத் தொடரில், இந்திய அணியின் கேப்டன் கோலி மற்றும் பும்ராவுக்கு ஓய்வு வழங்கப்படலாம் என்ற தகவலும் பரவி வருகிறது. இந்த தொடரில் தோனி தேர்வு செய்யப்படுவாரா? என்ற கேள்வியும் தொடர்ந்து எழுந்த வந்த நிலையில், இனி வரும் காலங்களில் தோனி விக்கெட் கீப்பருக்கான சாய்ஸில் முதலில் இருக்க மாட்டார்.
விக்கெட் கீப்பிங்கில் ஃபர்ஸ்ட் சாய்ஸாக பன்ட்தான் இருப்பார். அவர் தன்னுடைய திறமைகளை வளர்த்துக்கொள்ள நேரம் வழங்கப்படும். இனிவரும் காலங்களில் தோனி 15 வீரர்கள் கொண்ட பட்டியலில் இருப்பார். ஆனால், ப்ளேயிங் லெவனில் கொஞ்சம் கஷ்டம்தான். இந்திய அணிக்கு தொடர்ந்து அவரின் வழிக்காட்டுதல் நிச்சயம் தேவை. அவர் அணியிலிருந்து விலகுவது என்பது ஆரோக்கியமானதாக இருக்காது” எனவும் பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இந்திய அணி அடுத்தடுத்து இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க முடிவு செய்துள்ளதாகவும், விரைவில் தோனி ஓய்வை அறிவிப்பார் எனவும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் அடுத்து மேற்கிந்திய தீவுகள் அணியுடன் நடக்கவுள்ள தொடரில் இருந்து தோனி விலகியுள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசியுள்ள பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், “தோனி மேற்கிந்தியத் தொடரிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார்.
அவர் சிறிது காலம் ஓய்வு எடுக்க விருப்புவதாக தெரிவித்தவர், அடுத்ததாக இந்திய ராணுவத்தில் தனது பணியை முழுநேரமாக தொடர உள்ளதாக தெரிவித்துள்ளார்” என கூறினார். மேலும் ஏற்கனவே கூறிய படி தோனிக்கு பதிலாக பந்த் இந்த தொடரில் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தோனி இந்திய ராணுவத்தில் கவுரவ லெஃப்டினென்ட் கர்னலாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் ராணுவ வீரர்களுடன் உரையாடுவதையும் அவர் வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இது மட்டுமில்லாமல் தோனி விளையாடும் வீடியோ கேம்ஸ் கூட ஆர்மி சம்பந்தமானதாகத் தான் இருக்கும் என விராட் கோலியே ஒருமுறை கூறியிருக்கிறார். அதன் படி தான் இந்தமுறையும் ராணுவ வீரர்களை அவர் சந்திக்கவுள்ளார். இந்நிலையில் இந்திய அணி நாளை அறிவிக்கப்படவுள்ள நிலையில், தோனிக்குப் பதிலாக பந்த் முழுநேர கீப்பராக செயல்படப்போவது உறுதியாகியுள்ளது.
விடுதலை வீரர் அர்த்தநாரீச வர்மாவுக்கு நினைவு மண்டபம் அமைக்க வேண்டும்! மருத்துவர் இராமதாசு
வெள்ளையரின் அடக்குமுறை உச்சத்தில் இருந்த காலத்தில் கூட, அவற்றைக் கண்டு அஞ்சாதவராக விளங்கிய அர்த்தநாரீச வர்மாவுக்கு மணிமண்டபம் அமைக்க பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை. இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
விடுதலைப் போராட்ட வீரரும், தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியின் நிறுவனருமான எஸ்.எஸ். இராமசாமி படையாட்சியாரின் உருவப்படம் தமிழக சட்டப்பேரவை மண்டபத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சட்டப் பேரவைத் தலைவர் தனபால் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் முக்கியத் தலைவர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் இந்த விழாவில் பங்கேற்று சிறப்பித்துள்ளனர்.
பெருந்தலைவர் காமராசர் அமைச்சரவையில் உள்ளாட்சித் துறை அமைச்சராக பணியாற்றியதுடன், வன்னிய மக்களுக்கு இட ஒதுக்கீடு கோரி குரல் கொடுத்தவரான இராமசாமி படையாட்சியாருக்கு சட்டப்பேரவையில் உருவப்படம் திறந்திருப்பது மிகவும் பொருத்தமான அங்கீகாரம் ஆகும். அதற்கு முன்பாக அவரது பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும்; கடலூரில் நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்று அறிவித்து அவற்றை செயல்படுத்தி வரும் தமிழக அரசு, இப்போது இராமசாமி படையாட்சியாரின் உருவப்படத்தையும் திறந்திருப்பது வரவேற்கத்தக்கதாகும். இதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இராமசாமி படையாட்சியார், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், பெரும்பிடுகு முத்தரையர், சி.பா. ஆதித்தனார், கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, இரட்டைமலை சீனிவாசன், ஏ.டி.பன்னீர்செல்வம், ஒண்டிவீரன், வீரன் சுந்தரலிங்கம், வீரன் அழகுமுத்துக்கோன், காலிங்கராயன், ம.பொ.சிவஞானம் உள்ளிட்ட தலைவர்களுக்கு இந்த ஆட்சியில் சிறப்பு செய்யப்பட்டிருக்கிறது. இது மிகவும் பாராட்டத்தக்கதாகும்.
தமிழக அரசால் சிறப்பிக்கப்பட்ட இந்த வரிசையில் விடுதலைப்போராட்ட வீரரும், இராஜரிஷி என்று போற்றப்பட்டவருமான அர்த்தநாரீச வர்மாவுக்கு இடமளிக்கப்படாதது தான் மிகுந்த வருத்தமளிக்கிறது. சேலம் மாநகர எல்லைக்குட்பட்ட சுகவனபுரியில் 1874-ஆம் ஆண்டு ஜூலை 27-ஆம் தேதி பிறந்த அர்த்தநாரீச வர்மா அவர்கள், தனது வாழ்நாள் முழுவதும் கதராடை அணிவதையே கொள்கையாகக் கொண்டிருந்தார். தேச விடுதலை, தமிழ்நாட்டின் எல்லைக்காப்பு, மதுஒழிப்பு, கல்வி, சமூக முன்னேற்றம் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி ஏராளமான கவிதைகளை அவர் எழுதியுள்ளார். மகாகவி பாரதியாரின் சமகாலத்தவரான அர்த்தநாரீச வர்மாவின் கவிதைகள் பாரதியாரின் கவிதைகளுக்கு இணையான வீரியம் கொண்டவை. பல பத்திரிகைகளை தொடர்ந்து நடத்தி விடுதலை உணர்வை ஊட்டிய வர்மா ஏராளமான நூல்களையும் வெளியிட்டுள்ளார். அவரது கவிதைகள் விடுதலைப் போருக்கு உரமூட்டின.
வெள்ளையரின் அடக்குமுறை உச்சத்தில் இருந்த காலத்தில் கூட, அவற்றைக் கண்டு அஞ்சாதவராக விளங்கியவர் அர்த்தநாரீச வர்மா ஆவார். மகாகவி பாரதியார் இறந்தபோது, ஆங்கிலேயருக்கு அஞ்சி அவரது இறுதி ஊர்வலத்துக்கு கூட யாரும் வராத போது, பாரதியாருக்காக துணிச்சலாக இரங்கல் பாடிய ஒரே கவிஞர் அர்த்தநாரீச வர்மா மட்டுமே. அவரது இரங்கற்பா சுதேசமித்திரனில் வெளியானது. இந்திய விடுதலைக்காக வீரபாரதி எனும் பத்திரிகையை நடத்தினார். ஆனால், ஆங்கிலேயர்களுக்கு எதிராக பத்திரிகை நடத்துவதை தடுக்கக் கொண்டுவரப்பட்ட அச்சக சட்டத்தால் அர்த்தநாரீச வர்மா பாதிக்கப்பட்டார். வாரத்தில் 3 நாட்கள் வெளிவந்த இப்பத்திரிகை, அரச அடக்குமுறையால் நிறுத்தப்பட்டது.
தமிழ்நாட்டில் மதுவிலக்குக்கு வித்திட்டதில் அர்த்தநாரீச வர்மாவின் பங்கு மகத்தானது. மதுவிலக்கை வலியுறுத்தி நாடு முழுவதும் சென்று பரப்புரை மேற்கொண்டார். நாட்டுக்காகவே வாழ்ந்த, உழைத்த அர்த்தநாரீச வர்மாவுக்கு இந்த நாடும், சமூகமும் பரிசாக வழங்கியது வறுமையைத் தான். சேலத்தில் பிறந்து தமது வாழ்வின் இறுதிக்காலத்தை திருவண்ணாமலையில் கழித்த அர்த்தநாரீச வர்மா தமது 90-ஆவது வயதில் 07.12.1964 அன்று காலமானார். அவரது சேவை இன்றுவரை அங்கீகரிக்கப்படவில்லை.
கவிச்சிங்கம் அர்த்தநாரீச வர்மாவின் பணிகளுக்கும், சேவைகளுக்கும் உரிய அங்கீகாரம் வழங்காமல் இனியும் புறக்கணிக்கக் கூடாது. தமிழகத்திற்கு புகழ் சேர்த்த தலைவர்களை பெருமைப்படுத்தி வரும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு, ராஜரிஷி அர்த்தநாரீச வர்மா அவர்களின் பிறந்தநாளினை அரசு விழாவாக கொண்டாடுவதுடன், திருவண்ணாமலையில் அர்த்தநாரீச வர்மாவுக்கு மணிமண்டபமும், சேலத்தில் திருவுருவச்சிலையும் அமைக்க வேண்டும்.
அர்த்தநாரீச வர்மா அவர்களின் வரலாறு மற்றும் பாடல்களை பாடநூல்களில் சேர்ப்பது; தமிழ் மொழியில் சிறந்த கவிஞர்களுக்கு அர்த்தநாரீச வர்மா பெயரில் விருது வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசும் அதன் பங்குக்கு விடுதலைப் போராட்ட வீரரை கவுரவிக்கும் வகையில் சேலம் விமான நிலையத்துக்கு அர்த்தநாரீச வர்மா பெயரை சூட்டி, அவரது அஞ்சல் தலையை வெளியிட வேண்டும் என்றும் அதில் அவர் தெரிவித்துள்ளார்.
Ardhanarishvara Varma Freedom Fighter,Ardhanarishvara Varma,சுதந்திர போராட்ட வீரர் அர்த்தநாரீச வர்மா, மறைக்கப்பட்ட சுதந்திர போராட்ட வீரர் அர்த்தநாரீச வர்மா,மறைக்கப்பட்ட சுதந்திர போராட்ட போராளி அர்த்தநாரீச வர்மா
கடந்த சில நாட்களாக பரபரப்பாக பேசப்படும் நபர் நடிகர் சூர்யா. இவர் முன்னதாக ஒரு நிகழ்ச்சியில் பேசிய பொழுது மத்திய அரசின் சில திட்டங்களை எதிர்த்து பேசினார். அதாவது மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை, மும்மொழி கொள்கை, நீட் தேர்வு போன்ற திட்டங்களை விமர்சித்து பேசினார்.
அதாவது புதிய கல்வி கொள்கை மாணவர்களை பெரிதும் பாதிக்கும். நீட் தேர்வு காரணமாக ஏழை மாணவர்கள் பாதிப்படைகின்றன. நீட் கோச்சிங் என்ற பெயரில் தனியார் நிறுவனங்கள் 5000 கோடி ரூபாய் வரை வியாபாரம் நடத்துகின்றனர். ஒரு ஏழை மாணவர் அவ்வளவு தொகையில் எவ்வாறு படிக்க முடியும்.
மேலும் மும்மொழி கொள்கை என்ற பெயரில் ஒரு மொழியை திணிப்பது தவறாகும். அவரவர் தாய் மொழியில் படித்தால் தான் சிரிப்பாக படிக்க முடியும் என்று கூறினார்.
இவரின் பேச்சுக்கு பலரும் ஆதரவாகவும் தெரிவித்தனர். குறிப்பாக நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளிப்படையாகவே சூரியாவுக்கு ஆதரவு தெரிவித்தார். பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி தலைவர் முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான திரு அன்புமணி ராமதாஸ் அவர்கள் சூர்யாவின் கருத்து சரியானது, கருத்து சுதந்திரம் அனைவருக்கும் உண்டு எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில், நடிகர் சூரியா மீது பாஜக தலைவர்கள் விமர்சனம் வைத்தனர். அமைச்சர் கடம்பூர் ராஜூ, சூரியாவுக்கு என்ன தெரியும்? என்று கேட்டிருந்தார்.
இந்நிலையில் நடிகர் சூரியா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கல்வி என்பது ஒரு சமூக அறம். பணம் இருந்தால் விளையாடு என்று சொல்கிற சூதாட்டமாக அது மாறக்கூடாது. நம் நாட்டில் கல்வியானது ஏழைகளுக்கு ஒன்றாகவும், வசதி படைத்தவர்களுக்கு ஒன்றாகவும் இருக்கிறது என்பதை உணர புள்ளி விவரங்கள் தேவையில்லை. மனசாட்சியே போதுமானது என்று கூறியுள்ளார்.
மேலும், பெற்றோரை இழந்த மாணவி மருத்துவம் முடித்து ராணுவத்தில் பணியாற்றுகிறார். கல் உடைக்கிற தொழிலாளியின் மகன், சென்னை மருத்துவக்கல்லூரியில் மேற்படிப்பு படித்துக்கொண்டிருக்கிறார். ஆடு மேய்க்கிற பெற்றோரின் மகன், சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் படித்து டாக்டர் ஆகி கிராமப்புறங்களில் பணியாற்றுகிறார்.
இவ்வாறு தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.