தங்களிடம் தான் சரக்கும் மிடுக்கும் உள்ளதாக கட்சியினரை தூண்டிய திருமாவளவன் போடும் நல்லவர் வேஷம்
கடலூர் மாவட்டம் நெய்வேலியை அடுத்த ஏ.குறவன்குப்பம் பகுதியைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிற்சங்க நிர்வாகியான பன்னீர் மற்றும் அவரது மகனும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முகாம் அமைப்பாளருமான பிரேம்குமார் என்பவரும் வடலூரைச் சேர்ந்த ஒரு மாணவியை தொடர்ந்து பாலியல் சீண்டல் செய்து வந்த நிலையில், அது குறித்து அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளனர். மாணவியை பிரேம்குமார் சீண்டியதை, மாணவியின் வீடு அமைந்திருக்கும் தெருவில் வசிக்கும் விக்னேஷ் என்ற இளைஞர் கண்டித்ததால் அவர் இவ்வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார். அந்த வழக்கில் பிரேம்குமார் கைது செய்யப்படுவதற்கும் சாட்சியாக இருந்த விக்னேஷ் பெரிதும் உதவியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பிரேம்குமார், அவரது தந்தை பன்னீர், உறவினர் வல்லரசு ஆகிய மூவரும் விக்னேஷை எப்படியாவது பழிவாங்க திட்டமிட்டனர். மேலும் அதுமட்டுமின்றி இவர்கள் ஏ.குறவன்குப்பத்தில் வாழும் விக்னேஷின் உறவினர் மகளான கல்லூரி மாணவி ராதிகா மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளனர். ஏற்கனவே விக்னேஷுக்கும், ராதிகாவுக்கும் திருமணம் செய்து வைக்க அவர்களின் குடும்பத்தினர் முடிவு செய்திருந்த நிலையில், அந்த திருமணத்தை நடக்க விட மாட்டோம் என்றும் இவர்கள் மிரட்டி வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மதிய வேளையில் நீலகண்டனின் வீட்டுக்கு சென்ற பன்னீர், பிரேம்குமார், வல்லரசு ஆகியோர் ராதிகாவின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளதாக கூறி, அந்த படத்தையும் அவர்களிடம் காட்டியுள்ளனர். இத்துடன் முடியாமல் மேலும் அந்த மாணவி திருமணம் செய்து கொள்வதாக முடிவு செய்துள்ள விக்னேஷையும் கொலை செய்யப்போவதாகவும் அவர்கள் மிரட்டியுள்ளனர்.
இதனால் அவமானம் அடைந்த மாணவி ராதிகா தமது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அடுத்த சில மணி நேரத்தில் வீணங்கேணி என்ற இடத்தில் விக்னேஷ்யும் அடித்து கொலை செய்து, அங்குள்ள மரம் ஒன்றில் தூக்கில் தொங்கவிட்டுள்ளனர். பிரேம்குமார் தலைமையிலான நாடகக் காதல் கும்பல் தான் விக்னேஷை கொடூரமாக படுகொலை செய்து தூக்கில் தொங்க விட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் அனைவரும் குற்றஞ்சாட்டி உள்ளனர். இது போன்ற நாடக காதல் கும்பலின் அட்டகாசத்தால் தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது என்றும் பகிரங்கமாகவே விக்னேஷ் மரணத்துக்குக் காரணம் விசிகவைச் சேர்ந்த நிர்வாகி தான் என்றும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், சிதம்பரத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், நெய்வேலி அருகே குறவன்குப்பன் கிராமத்தில் கல்லூரி மாணவி ராதிகாவும், அவரை திருமணம் செய்துகொள்வதாக இருந்த விக்னேஷ் என்பவரும் தற்கொலை செய்துகொண்ட தகவல் அதிர்ச்சியளிக்கிறது. அந்த இரு உயிர்களும் பலியாவதற்குக் காரணமாக இருந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் தன் கட்சி நிர்வாகியை கண்டித்துள்ளார். மேலும் அரசியல் ஆதாயத்துக்காக இப்படிப்பட்ட பிரச்சினைகளைப் பயன்படுத்த அரசும் அதிகாரிகளும் இடம்கொடுத்துவிடக் கூடாது. அதேபோல சமூக வலைதளங்கள் ஆக்கபூர்வச் செயல்களுக்குப் பதிலாக சமூக சீர்கேடுகளுக்குப் பயன்படுவது வேதனையளிக்கிறது.
முகநூல் பக்கங்களில் தாறுமாறாகப் பதிவுகள் வெளியிடுவது, புகைப்படங்கள் வெளியிடுவது போன்ற நடவடிக்கைகளில் இளம் தலைமுறையினர் ஈடுபட்டு, அதனால் பல்வேறு சமூகச் சிக்கல்கள் எழுகின்றன. வாழ வேண்டிய பருவத்தில் 2 பேர் பலியாகும் அவலமும் ஏற்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் பரவிவரும் தீங்காக சமூக வலைதளக் கருத்துகள் உள்ளன என்றும் குறிப்பிட்டுள்ள திருமாவளவன், மத்திய அரசு சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவது தொடர்பாக அதற்கான உரிய வரையறைகளை வகுக்க வேண்டும் என்றும், சமூக சிக்கல்கள் எழாத அளவுக்குக் கட்டுப்பாடுகளை வரையறுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அரபு நாடுகளில் சமூக வலைதளங்களின் பயன்பாடு மிகுந்த கட்டுப்பாட்டில் உள்ளதாகத் தெரிவித்த அவர், அங்கு ஆபாச வலைதளங்களைப் பயன்படுத்த முடியாத அளவு, தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும், அதை ஏன் இந்திய அரசு பின்பற்றக் கூடாது எனவும் கேள்வி எழுப்பினார்.
சில காலங்களுக்கு முன்பு பொது மேடையில் பேசிய திருமாவளவன் தங்கள் கட்சியினரிடம் தான் சரக்கும் மிடுக்கும் உள்ளதாகவும் அதனால் தான் மாற்று சமுதாய பெண்கள் அவர்களை தேடி வருவதாகவும் பேசி இருந்தார். இப்படி பேசியது அந்த கட்சி இளைஞர்களை தூண்டி விட்டு அவர்கள் விருப்பம் இல்லாத பெண்களை விரட்டி விரட்டி காதலை ஏற்க சொல்லி தொந்தரவு செய்யவும், அவர்கள் நாடக காதலை ஏற்க மறுக்கும் பெண்களை கொலை செய்வது மற்றும் அவர்கள் மீது ரசாயன அமிலம் வீசுவது போன்றவற்றிற்கும் காரணமாக இருக்கிறது.
செய்வதை எல்லாம் செய்து விட்டு தற்போது நல்லவர் வேஷம் போட்டு பேசியுள்ளது பொது மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.