மத்திய சென்னையில் மரண அடி வாங்க போகும் திமுக சத்தமில்லாமல் சாதித்து வரும் பாமகவின் சாம் பால்
வருகின்ற மக்களவை தேர்தலில் திமுக,காங்கிரஸ்,விசிக மற்றும் இடதுசாரிகள் ஒரு அணியாகவும்,அதிமுக,பாமக,பாஜக மற்றும் தேமுதிக மறு அணியாகவும் போட்டியிடவுள்ளன. மேலும் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஏற்பட்ட சாதகமான சூழ்நிலையை பயன்படுத்தி கட்சி ஆரம்பித்த கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் மற்றும் அதிமுகவிலிருந்து பிரிந்து சசிகலா மற்றும் தினகரன் ஆதரவாளர்களால் உருவான அமமுக,திரைப்பட இயக்குனர் சீமானின் நாம் தமிழர் கட்சி போன்றவை தனித்து களம் காண்கின்றன.
இரு கூட்டணிகளிலும் தொகுதி பங்கீடு முடிந்து ஒவ்வொரு தொகுதியிலும் தங்கள் கட்சிக்கான வேட்பாளர்களையும் அறிவித்து விட்டார்கள். அந்த வகையில் மத்திய சென்னை தொகுதியில் திமுக சார்பாக ஏற்கனவே போட்டியிட்ட கருணாநிதி அவர்களின் குடும்ப உறவான தயாநிதி மாறன் அவர்களும்,அதிமுக கூட்டணியில் பாமக சார்பாக தொழிலதிபர் முனைவர் சாம் பால் அவர்களும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்கள்.
மேலும் அமமுக கூட்டணியின் சார்பாக அதன் கூட்டணி கட்சியான எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணைத் தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவியை வேட்பாளராக அறிவித்துள்ளார்கள்,மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் கட்சியும் தனித்தனியாக தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளன.
மத்திய சென்னையை பொறுத்தவரை திமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான தயாநிதி மாறனுக்கும்,பாமகவின் வேட்பாளர் சாம் பாலுக்கும் இடையே தான் போட்டி என பரவலாக பேசப்பட்டு வந்தது. ஆனால் சமீபத்தில் வெளியான தகவலின் படி அனைவரின் எதிர்பார்ப்புகளையும் மீறி மத்திய சென்னை தொகுதியில் பாமக வேட்பாளர் சாம் பால் அவர்களுக்கு தயாநிதி மாறனை விட பெருமளவு செல்வாக்கு கூடியுள்ளதாக தெரிகிறது.
அதற்கு அடுத்த இடத்தில் அமமுக கூட்டணியின் சார்பாக போட்டியிடும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணைத் தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி இரண்டாம் இடத்திலும் உள்ளதாக கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.திமுகவின் வேட்பாளர் தயாநிதி மாறன் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.இது திமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவின் வேட்பாளரான தயாநிதி மாறன் ஏற்கனவே அமைச்சராக இருந்தாலும் தொகுதி மக்களிடமோ,சொந்த கட்சி தொண்டர்களிடமோ நெருங்கி பழகியதில்லை என்றும், அவருக்காக வேலை செய்யும் கட்சியினருக்கும் நிர்வாகிகளுக்கும் ஒரு பைசா கூட செலவு செய்வதில்லை என்றும் சொந்த கட்சியினரே குற்றம் சாட்டி வருகின்றனர்.மேலும் தான் ஒரு தொழிலதிபர் என்ற கர்வத்துடன் தொகுதி மக்களை கூட கடந்த காலங்களில் சந்தித்ததில்லை என்றும் விமர்சனம் செய்து வருகின்றனர்.திமுகவின் குடும்ப வாரிசு என்ற ஒரே காரணத்திற்காக இந்த தொகுதியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று திமுக நிர்வாகிகளே குற்றம் சாட்டுகின்றனர்.
அதிமுகவுடன் கூட்டணி அமைத்திலிருந்து பாமக மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கபட்டிருந்தாலும் தனக்கு கிடைத்த 7 தொகுதிகளிலும் மிகவும் கவனமாக செயல்பட்டு சரியான வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. பாமக ஒரு குறிப்பிட்ட சாதிக்கான கட்சி என்று பல்வேறு நேரங்களில் விமர்சனம் வைக்கபட்டிருந்தாலும் அதை பாமக தொடர்ந்து மறுத்து வந்ததது.அந்த வகையில் தற்போது பாமக கூறியது உண்மை என்பதை தாங்கள் நிறுத்திய வேட்பாளர்களில் அனைத்து சமூகத்தினருக்கும் சமமான வாய்ப்பை வழங்கியது மூலம் நிரூபித்துள்ளது.
பாமக சார்பாக மத்திய சென்னையில் போட்டியிடும் சாம் பால் அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில தலைவராக உள்ளார். மேலும் அவர் தனது கடின உழைப்பால் பல்வேறு தொழில் நிறுவனங்களை சிறப்பாக நடத்தி வருகிறார். பாண்டிச்சேரியில் தான் நடத்தி வரும் கல்வி நிறுவனங்களில் ஏழை மக்களுக்கு நிறைய சலுகைகளை வழங்கி வருகிறார். பிரபல தொழிலதிபராக இருந்தாலும் எந்த நேரத்திலும் மக்கள் அவரை சந்திக்கும் அளவிற்கு எளிமையாக உள்ளார் என்றும் மக்கள் கருதுகின்றனர்.அது மட்டுமல்லாமல் நன்கு படித்தவர்,ப பல்வேறு மக்கள் நலப்பணிகளில் தன்னார்வளராக கலந்து கொண்டிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
மேலும் மத்திய சென்னை தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாள் முதல் தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். மேலும் அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில தலைவராக இருப்பதால் முகநூல் ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் மக்களின் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் உரிய நேரத்தில் சரியான முறையில் விளக்கமளித்து வருகிறார். இது கட்சியியையும் தாண்டி இளம் தலைமுறையினரிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் தொகுதி பக்கமே திரும்பி பார்க்காத தயாநிதி மாறன் எப்படி மத்திய சென்னை தொகுதியை சமாளிக்க போகிறார் என்று திமுகவினரே கலக்கத்தில் உள்ளனர்.எது எப்படியோ இந்த மக்களவை தேர்தலில் திமுகவின் செல்வாக்கு மிகுந்த பகுதியாக கருதப்படும் சென்னையை சேர்ந்த மத்திய சென்னை தொகுதியில் அக்கட்சிக்கு மரண அடி காத்து கொண்டிருக்கிறது என்று அக்கட்சியினரே புலம்பி வருகின்றனர்.