கேரளாவில் 7 மாதக் குழந்தையின் நுரையீரலில் சிக்கிய எல்.இ.டி பல்ப்!!! சிறப்பாக செயல்பட்டு குழுந்தையின் உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்!!!

0
31
#image_title

கேரளாவில் 7 மாதக் குழந்தையின் நுரையீரலில் சிக்கிய எல்.இ.டி பல்ப்!!! சிறப்பாக செயல்பட்டு குழுந்தையின் உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்!!!

கேரளா மாநிலத்தில் ஏழு மாதம் நிரம்பிய குழந்தையின் நுரையீரலில் சிக்கிய எல்.இ.டி பல்ப்பை மருத்துவர்கள் சிறப்பாக செயல்பட்டு அறுவை சிகிச்சை செய்து குழந்தையின் உயிரை காப்பாற்றியுள்ளனர்.

கேரள மாநிலத்தின் கோட்டயம் பகுதியை சேர்ந்த 7 மாதம் ஆன குழந்தைக்கு திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டது. தொடர்ச்சியான இருமல் மற்றும் மூச்சுத் திணறலால் அந்த குழந்தை அவதிப்பட்ட நிலையில் குழந்தையின் பெற்றவர்கள் சிகிச்சைக்காக கோட்டயம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அழைத்துச் சென்றனர்.

மருத்துவமனையில் குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தையின் நுரையீரலின் கீழ் பகுதியில் எதோ ஒரு சிறிய பொருள் சிக்கி இருப்பதை கண்டறிந்தனர். இதனால் தான் குழந்தைக்கு தொடர்ச்சியான இருமலும் மூச்சுத் திணறலும் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து குழந்தைக்கு மூச்சுக்குழாய் சோதனை செய்யப்பட்டது. அப்பொழுது தான் குழந்தையின் வலது நுரையீரலில் சிவப்பு நிற எல்.இ.டி பல்ப் சிக்கி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

இதையடுத்து குழந்தையின் நுரையீரலில் சிக்கியுள்ள எல்.இ.டி பல்ப்பை அகற்றுவதற்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். இதையடுத்து சிறப்பாக செயல்பட்ட மருத்துவர்கள் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்து நுரையீரலில் சிக்கிய சிக்கியிருந்த எல்.இ.டி பல்ப்பை அகற்றி குழந்தையின் உயிரை காப்பாற்றினர்.

மேலும் இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில் “குழந்தை வைத்து விளையாடிக் கொண்டிருந்த பொம்மையில் இருந்த எல்.இ.டி பல்ப் குழந்தையின் வாய் வழியாக உடலுக்குள் சென்றிருக்கலாம். இது போன்ற நிகழ்வுகள் மிகவும் அரிதாகவே நடக்கும் என்பதால் குழந்தைகளை பெற்றோர்கள் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தாத விளையாட்டு பொருள்களையே குழந்தைகளுக்கு விளையாடுவதற்கு கொடுக்க வேண்டும்” என்று கூறினர்.