அண்ணாமலையின் அதிகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த மேலிடம்!! தமிழகத்திற்கு புதிய பாஜக மேலிட பொறுப்பாளர்.. பரபரக்கும் அரசியல் களம்!!

0
52
#image_title

அண்ணாமலையின் அதிகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த மேலிடம்!! தமிழகத்திற்கு புதிய பாஜக மேலிட பொறுப்பாளர்.. பரபரக்கும் அரசியல் களம்!!

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக அண்மையில் விலகியது.இந்த கூட்டணி முறிவிற்கு முக்கிய காரணம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என்று சொல்லப்பட்டு வரும் நிலையில் இந்த விவகாரத்தால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் பாஜகவின் மூத்த தலைவர்களான அமித்ஷா மற்றும் ஜெ.பி.நட்டாவை சந்திப்பதற்காக அண்ணாமலை அவர்கள் கடந்த ஞாயிற்று கிழமை அன்று திடீர் டெல்லி பயணம் மேற்கொண்டார்.இவரின் இந்த பயணம் அரசியல் வட்டாரத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதற்கு காரணம் என்ன என்பது குறித்து விரிவான விளக்கம் கொடுக்கத்தான் அவர் டெல்லி புறப்பட்டு இருக்கிறார் என்று அரசியல் வட்டாரத்தில் சொல்லப்பட்டது.ஆனால் டெல்லி பயணத்திற்கு முன் அண்ணாமலை அவர்கள் செய்தியர்கள் சந்திப்பில் இந்த டெல்லி பயணம் வழக்கமான ஒன்று தான்.பாதையாத்திரை குறித்து விளக்கம் அளிக்கத்தான் பாஜக மூத்த தலைவர்களை சந்திக்க செல்கிறேன் என்றார்.

இந்நிலையில் டெல்லி சென்ற அண்ணாமலை அவர்கள் திங்கள் அன்று பாஜக மூத்த தலைவரான ஜெ.பி.நட்டாவை சந்தித்தார்.அப்பொழுது அதிமுக – தமிழக பாஜகவிடையே இருந்த கருத்து முரண்பாடு,கூட்டணி முறிவு,பாதையாத்திரை குறித்து உரிய விளக்கம் கொடுத்தார்.அதையடுத்து அன்றிரவு 10 மணியளவில் பாஜக மூத்த தலைவரும்,மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷாவை சந்தித்து அதிமுக – பாஜக கூட்டணி முறிவு,தமிழக பாஜகவின் அடுத்தகட்ட நகர்வு என்ன என்பது குறித்து விரிவான விளக்கத்தை அண்ணாமலை கொடுத்தார் என்ற தகவல் வெளியானது.

ஜெ.பி.நட்டா,அமித்ஷாவை தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனை நேற்று அண்ணாமலை சந்தித்தார்.அப்பொழுது அதிமுக – பாஜக கூட்டணி முறிவு,நாடாளுமன்ற தேர்தலுக்கான அடுத்தகட்ட நகர்வு,அதிமுக இல்லாமல் பாஜக தனித்து போட்டியிட்டு வெல்ல முடியுமா? என்பது குறித்த விரிவான விளக்கத்தை நிர்மலா சீத்தாராமனிடம் அவர் அளித்திருப்பதாக தகவல் வெளியானது.இதனை தொடர்ந்து அண்ணாமலையில் இந்த விளக்கத்தை அறிக்கையாக அமித்ஷாவிடம் நிர்மலா சீத்தாராமன் வழங்க இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

மேலும் அதிமுக கூட்டணியில் இருந்து விலக அண்ணாமலை தான் காரணம் என்று சொல்லப்படும் நிலையில் உங்களுடைய சொந்த கருத்தால் தான் கூட்டணி முறிவு ஏற்பட்டு இருக்கிறது.மேலிட பாஜக சொல்வதைத்தான் நீங்கள் செய்ய வேண்டுமென்று அவருக்கு சில அறிவுரைகளை நிர்மலா சீத்தாராமன் வழங்கியதாக சொல்லப்படுகிறது.இந்நிலையில் தமிழ்நாட்டிற்கு பாஜக மேலிட பொறுப்பாளராக இருந்த பிஎல் சந்தோஷ்க்கு பதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அந்த பதவிக்கு நியமிக்கப்படுவர் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.இதனால் அண்ணாமலைக்கு பெரும் சிக்கல் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.

அண்ணாமலையின் டெல்லி பயணம் முடிய காலதாமதம் ஆகும் என்பதினால் இன்று நடைபெற இருந்த பாஜகவின் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக பாஜக செய்தி வெளியிட்டது.ஆனால் அண்ணாமலை இன்றி இந்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டமானது பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த ஆலோசனைக் கூட்டம் கேசவ் விநாயகம் தலைமையில் தற்பொழுது நடைபெற்று வருகிறது.பாஜக – அதிமுக கூட்டணி முறிவிற்கு பிறகு நடக்கும் முதல் கூட்டம் என்பதினால் நாடாளுமன்ற தேர்தல் குறித்து பேசப்படும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.பாஜகவின் இந்த ஆலோசனைக் கூட்டம் அண்ணாமலை இல்லாமல் நடைபெறுவதால் அவரின் அதிகாரத்திற்கு மேலிட பாஜக முற்றுப்புள்ளி வைத்துள்ளதா? என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்து இருக்கிறது.