இன்று மாலை நடைபெறும் ஆலோசனை! வெளியாக இருக்கும் முக்கிய அறிவிப்பு!

0
69

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக இன்று ஆலோசனை செய்ய இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு திருநெல்வேலி, தென்காசி, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம் செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில், தேர்தல் நடத்தாமல் இருக்கும் மாவட்டங்களில் வருகின்ற செப்டம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்து இருக்கின்றது. இதனால் உள்ளாட்சித் தேர்தலை செப்டம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள் நடத்தி முடிப்பதற்கான சாத்தியம் என்ன என்பது தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் அன்னையில் ஆலோசனை ஒன்றை நடத்தினார்.

இவ்வாறான சூழலில், உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வதற்காக திமுகவின் மாவட்டச் செயலாளர்களுடன் ஸ்டாலின் இன்று ஆலோசனை செய்ய இருக்கின்றார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் மாலை 5 மணி அளவில் இந்த கூட்டம் நடைபெற இருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது. செப்டம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட சூழ்நிலையில், திமுக தன்னுடைய மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை செய்ய இருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் முதல்முறையாக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.