மருதாணியின் மருத்துவ பயன்கள்! இந்த நோய்கள் அனைத்தும் குணமாகும்!

0
174

மருதாணியின் மருத்துவ பயன்கள்! இந்த நோய்கள் அனைத்தும் குணமாகும்!

 

தற்போது வளர்ந்து வரும் காலகட்டத்தில்  பெண்கள் திருமணம், பிறந்தநாள் போன்ற முக்கிய தினங்களில் மேலும் தங்களை அழகுப்படுத்தி கொள்ள வேண்டும் என ரசாயனம் கலந்த பொருட்களை கையில் வைத்து அதனை மருதாணி என கூறுகின்றனர். ஆனால் நம் முன்னோர் காலத்தில் மருதாணி என்பது மிக முக்கிய பங்கு வகித்துள்ளது.

மருதாணி பயன்களை பற்றி நாம் அறிய வேண்டியவை. மருதாணி காற்றை தூய்மைப்படுத்தும் தன்மை கொண்டதால் கட்டாயமாக வீட்டில் மருதாணி செடி வளர்க்க வேண்டும். மருதாணி சிறந்த கிருமி நாசினியாக பயன்படுகிறது. கை கால்களில் ஏற்படும் சேற்று புண்களை இவை முற்றிலும் குணப்படுத்துகின்றது. மருதாணி குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சிறந்த மருந்தாக பயன்படுகிறது. அதனை அடுத்து மருதாணி பூவை நிழலில் காய வைத்து அதனை தலையணையில் வைத்து கட்டி உறங்கி வந்தால் நல்ல தூக்கம் ஏற்படும்.

தலையில் உள்ள பேன் குறையும். மருதாணியை நன்றாக அரைத்து அதனை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வெயிலில் காய வைத்த பின்பு எண்ணெயில் சேர்க்க வேண்டும். அந்த எண்ணையை 21 நாட்கள் வெயிலில்  வைத்த பிறகு நாம் பயன்படுத்தினால் முடி கருமையாகவும் நீட்டமாகவும் வளரும்.

 

தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் மருதாணி இலை சாற்றை குடித்து வந்தால் பத்து நாட்களில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் தீரும். இவ்வாறு மருதாணியில் எண்ணற்ற பயன்கள் இருக்கின்றது அதனால் அனைவரும் அவரவர்களின் வீட்டில் மருதாணி செடி வளர்க்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர்.

author avatar
Parthipan K