நிலச்சரிவு மற்றும் கனமழைக்கு காரணம் இதுதான்! நிபுணர்கள் சொன்ன விளக்கம்!

0
72
This is the reason for landslides and heavy rains! Experts' explanation!
This is the reason for landslides and heavy rains! Experts' explanation!

நிலச்சரிவு மற்றும் கனமழைக்கு காரணம் இதுதான்! நிபுணர்கள் சொன்ன விளக்கம்!

தற்போது இயற்கையின் சீற்றத்திற்கு காரணமாக எல்லா இடங்களிலும் கன மழையும்,  அதனால் அதனை தொடர்ந்து நிலச்சரிவும், அதன் காரணமாக பல்வேறு உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. வடமாநிலங்களிலும் இது போன்ற நிகழ்வுகளை கேள்விப்பட்டோம்.

தற்போது கடவுளின் தேசமான கேரளாவிலும் அந்த நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. கனமழை மற்றும் நிலச்சரிவு போன்றவை ஏற்பட மனிதனே முழுக்க காரணம். தற்போது கேரளாவில் பெய்து வரும் கனமழையின் காரணமாக நிலச்சரிவு போன்ற சம்பவங்களின் எதிரொலியாக ஒட்டுமொத்த மாநிலமும் நீரில் தத்தளித்து வருகிறது. பல தலைவர்கள் இரங்கல் தெரிவ்பித்து உள்ளனர்.

அங்கு கொட்டி தீர்த்த கன மழையின் காரணமாக பல்வேறு நபர்கள் மண்ணுக்குள் புதைத்துவிட்டனர். தற்போது வரை 21 ஆக உயிரிழப்பு உள்ளது. இதற்கு முக்கிய காரணம் அங்கு திடீரென கொட்டி தீர்த்த மழைக்கு காரணம் மேக வெடிப்பு தான் என்று நிபுணர்கள் சொல்லியுள்ளனர். இது குறித்து கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழக பேராசிரியர்  அபிலாஷ் உள்ளிட்டோர் கூறும்போது இடுக்கி மற்றும் கோட்டயம்  மாவட்டங்களில் வெறும் இரண்டு மணி நேரத்திற்குள் மட்டும் ஐந்து சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

இதற்கு காரணம் ஒரு சிறிய அளவிலான மேகவெடிப்பு நிகழ்வு என்று தெரிவித்துள்ளனர். மனிதன் காடுகளை அழித்து தோட்டங்கள் மற்றும் வயல்களாக மாற்றும் மனித நடவடிக்கைகளினால் மட்டுமே கனமழை, நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. இதனால் நிலைமை மிகவும் மோசம் அடையக் கூடும் எனவும் அவர் தெரிவித்தார்.

குறைந்த நேரத்தில் மிக அதிக மழை பெய்யும் நிகழ்வு கண்டிப்பாக மேகவெடிப்பு என்றுதான் அழைக்கப்படுகிறது. சில மணி நேரங்களில் அது இடி, மின்னலுடன் அல்லது ஆலங்கட்டி மழையும் ஏற்பட்டு மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார்.