செல்போன் திருட்டில் ஈடுபடும் மைனர் சிறுவர்கள் ! டிக்டாக் வெளியிட்டு போலிஸில் சிக்கிய சம்பவம் !

0
67

செல்போன் திருட்டில் ஈடுபடும் மைனர் சிறுவர்கள் ! டிக்டாக் வெளியிட்டு போலிஸில் சிக்கிய சம்பவம் !

சென்னையில் செல்போன் திருட்டில் ஈடுபட்ட குழு ஒன்று டிக்டாக் வீடியோக்களை வெளியிட அதை வைத்துப் போலிஸார் அவர்களைப் பிடித்துள்ளனர்.

சென்னை போன்ற பெருநகரங்களில் குற்றங்கள் அதிகமாகி வருகின்றன. அதிலும் மைனர் சிறுவர்கள் ஈடுபடும் குற்றச்செயல்கள் அதிகரிப்பது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற குற்றங்களுக்கு போதை பழக்கத்துக்கு அடிமையான சிறுவர்கள்தான் அதிகளவில் ஈடுபடுகின்றனர்.

இது போன்றா சம்பவம் ஒன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் சில நாட்களுக்கு முன் நடந்தது.  ஐடி ஊழியர் ஒருவரைத் தாக்கி கும்பல் ஒன்று அவரிடம் இருந்த செல்போனைத் திருடி சென்றது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரை வைத்து போலிஸார் விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது சம்மந்தப்பட்ட கும்பல் தி நகரிலும் இதுபோல ஒரு சம்பவத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்த சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் வெளியிட்ட டிக்டாக் வீடியோ ஒன்று போலீஸாரின் கவனத்துக்கு வந்தது. அதை வைத்து போலீஸார் அந்த கும்பலை பிடித்த போது அதிர்ச்சியடைந்துள்ளனர். அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் அனைவரும் 16, 17 வயதுடைய சிறுவர்கள். அவர்களைக் கைது செய்த போலீஸார் விசாரணையில் ஈடுபட்டனர்.

விசாரணையில் போதைக்கு அடிமையான அவர்கள் போதை மாத்திரைகள்  வாங்க செல்போன் திருட்டு போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டனர் எனப்து  தெரிய வந்துள்ளது. சிறுவர்களுக்கு போதை பொருட்களை விற்றது யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

author avatar
Parthipan K