நிர்வாகத்தை மிரட்டிய எம்எல்ஏ! பாஜகவில் நடக்கும் தொடர் குளறுபடி!

0
93
BJP key points conveniently caught by the police! Social networking site registration!
BJP key points conveniently caught by the police! Social networking site registration!

நிர்வாகத்தை மிரட்டிய எம்எல்ஏ! பாஜகவில் நடக்கும் தொடர் குளறுபடி!

தற்பொழுது ஐந்து வடமாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் வர உள்ளது. இந்த சூழலில் பலர் பாஜக பிரமுகர்கள் சிலர் காங்கிரஸ் கட்சிக்கு இடம்பெயர்ந்தனர். தற்போது பிரதமர் மோடிக்கு பஞ்சாப்பில் ஏற்பட்ட நிலையை அடுத்து இந்த தேர்தலில் பெருமளவு டெபாசிட் இழக்கும் என பலர் கூறி வருகின்றனர். இவ்வாறு இருப்பதால் பல பாஜக பிரமுகர்கள் வேறொரு கட்சிக்குத் தாவி வருகின்றனர். இந்த சூழலில் பாஜக எம்எல்ஏ ஹரக் சிங் ராவத் என்பவரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர். இதற்கு காரணமாக அவர்கள் கூறுவது, இவர் தனது மருமகளுக்கும் இந்த தேர்தலில் சீட் தர வேண்டும் இல்லையென்றால் பதவியை ராஜினாமா செய்வதாக கட்சிக்கு மிரட்டல் விடுத்துள்ளார் என கூறுகின்றனர்.

அதுமட்டுமின்றி கட்சிக்கு மாறாக நடந்து கொண்டதால் அம்மாநில அமைச்சர் சபையிலிருந்து ஹரக் சிங் ராவத் நீக்கப்பட்டுள்ளார். இவ்வாறு இருக்கையில் முன்னாள் பாஜக எம்எல்ஏ ஹரக் சிங் ராவத் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்த முன்னாள் பாஜக எம்எல்ஏ ஹரக் சிங் ராவத் செய்தியாளர்களை சந்தித்து  பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியது,பாஜக தன்னை உபயோகப்படுத்திக் கொண்டு தூக்கி எரிந்து விட்டதாக கூறியுள்ளார்.

இவ்வாறு இவர் கூறியதன் அடிப்படையில் பார்க்கும் பொழுது பாஜக கட்சிக்குள்ளே ஏதேனும் தில்லுமுல்லு நடந்து வருகிறது.பாஜக இம்முறை என்றுமில்லா அளவிற்கு பின்னடைவை சந்திக்கும் என கூறுகின்றனர்.அதேபோல பல காலமாக பாஜக கட்சிக்காக தங்களின்  ரத்தத்தை சிந்திய பிரமுகர்களை விட்டுவிட்டு புதிதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு புதிய பொறுப்புக்கள் கொடுத்து வருவதும் கட்சிக்குள்ளேயே பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.இவ்வாறு இருக்கையில் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் இந்த சட்டமன்ற தேர்தல் நடக்கும் வேளையில் வேறொரு கட்சியில் சேருவது பாஜகவிற்கு இன்னும் பின்னடைவையே தருகிறது.