மீண்டும் பெருகிவரும் MLM மோசடி!… தப்பிப்பது எப்படி?

0
34
#image_title

மீண்டும் பெருகிவரும் MLM மோசடி!… தப்பிப்பது எப்படி?

எம்.எல்.எம் மார்க்கெட்டிங் என்ற பெயரில் தமிழகத்தில் நாளுக்கு நாள் பண மோசடி அதிகரித்து வருகிறது. இதுபோன்ற போலி மோசடி நிறுவனங்களாகும் யம் நாட்டில் புதிது, புதிதாக உருவாகி வருகின்றனர்.

தங்கள் நிறுவனத்தை நம்பி ஒரு கணிசமான தொகையை நீங்கள் செலுத்தினால் மாதம்தோறும் வாரம்தோறும், ஏன்? நாள்தோறும் கூட உங்களுக்கு வட்டியாக பணம் கிடைக்கும். உங்கள் பணம் இரண்டு மடங்காகும் என்ற ஆசை வார்த்தை கூறுகின்றனர். இதை நம்பி பலரும் தங்கள் பணத்தை செலுத்தி ஏமாற்றம் அடைந்தவர்கள் பலர் உண்டு. தற்போது கூட V3 Ads என்னும் ஒரு விதமான எம்.எல்.எம் கம்பெனியும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

சைபர் கிரைம் காவல் துறையினர் கூகுள் பிளே ஸ்டோரில் இல்லாத செயலிகளை தங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டாம் என்றும் லிங்க் மூலம் வரும் எதனையும் உள்ளே சென்று பார்வையிட வேண்டாம் என்றும் அறிவுறுத்தி உள்ளனர்.

இருப்பினும் இரட்டிப்பாக  பணம் வரும் என்பதற்காக சிலர் லிங்க் மூலம் இதுபோன்ற எம்.எல்.ஏ கம்பெனியில் உறுப்பினராக சேர்ந்து ஆயிரக்கணக்கில் பணத்தை இழந்துள்ளனர். சிலர் லட்சக்கணக்கில் கூட பணத்தை செலுத்தி பணம் திரும்ப வராமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இது குறித்து சைபர் கிரைம் காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் மக்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

ஒருமுறை பணம் செலுத்தினால் போதும் இரண்டு, மூன்று நபர்களை எங்கள் கம்பெனி சேர்த்துவிட்டால் போதும் என புதிய புதிய வடிவில் எம்.எல்.ஏ கம்பெனிகள் புதிது, புதிதாக தினந்தோறும் அவதாரம் எடுத்து வருவது வாடிக்கையாக்கிவிட்டது. இருப்பினும் நாம் வங்கி அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களில் மட்டும் பணத்தை செலுத்துவது நல்லது என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

author avatar
Parthipan K