வாக்காளர்களுக்கு ஹெலிகாப்டரில் பணம் – தப்பிப்பாரா அண்ணாமலை?

0
168
#image_title
வாக்காளர்களுக்கு ஹெலிகாப்டரில் பணம் – தப்பிப்பாரா அண்ணாமலை?
கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கு  பாஜக பொறுப்பாளராக செயல்படும் அண்ணாமலை அவர்கள் பயணித்த ஹெலிகாப்டரில் பணம் கொண்டு சென்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் 224 தொகுதிகளுக்கும் வரும் மே 10ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் பிரதான கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜகவில் அதிருப்தியில் இருக்கும் பிரமுகர்கள் பரஸ்பரம் மாற்றுக் கட்சிகளுக்கு தாவி வருகின்றனர்.
இதையடுத்து கர்நாடக தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. மீண்டும் பாஜக ஆளப்போகிறதா? இல்லை இந்தமுறை காங்கிரஸ் கட்சி வெற்றி வாகைச்சூடப் போகிறதா? என்ற போட்டி நிலவிக் கொண்டு இருக்கிறது. இதற்கிடையில் தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை அவர்கள் கர்நாடகாவில் முகாமிட்டு முழு தேர்தல் பணியாற்றி வருகிறார். நிச்சயம் கர்நாடகாவில் பாஜக மாபெரும் வெற்றி அடைய செய்ய வேண்டும் என்ற முனைப்பில்  அண்ணாமலை உட்பட பாஜக முக்கிய நிர்வாகிகள் தேர்தல் வேலையை பார்த்துக் கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கர்நாடகத்தில் பரப்புரைக்கு சென்ற தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் ஹெலிகாப்டரில் மூட்டை மூட்டையாக பணம் எடுத்துச்சென்றதாக காங்கிரஸ் வேட்பாளர் வினய் குமார் சொரகே குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த சூழலில் கர்நாடக அரசியலில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தீவிர கவனம்செலுத்தி வருகிறார். உடுப்பிக்கு அண்மையில் அவர் ஹெலிகாப்டரில் சென்றார். அந்த ஹெலிகாப்டரில் மூட்டை மூட்டையாக பணம் இருந்ததாகவும் இதனை அதிகாரிகள் பரிசோதிக்கவில்லை என்றும் காங்கிரஸ் வேட்பாளரான வினய் குமார் சொரகே குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் நேர விரையத்தை தடுக்கவே ஹெலிகாப்டரில் பயணித்தேன் என்றும் விளக்கம் அளித்துள்ளார் மேலும் பணம் எதுவும் எடுத்துச் செல்லவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டு குறித்து அண்ணாமலை அவர்கள் பயணித்த ஹெலிகாப்டரை தேர்தல் அதிகாரிகள் முழுவதுமாக சோதனை செய்ததாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
author avatar
Savitha