பெயர் பலகை இந்த மொழியில் இல்லையா? இதோ அதிக அபராதம் ஐகோர்ட் நீதிபதிகள் விடுத்த எச்சரிக்கை! 

0
153
#image_title

பெயர் பலகை இந்த மொழியில் இல்லையா? இதோ அதிக அபராதம் ஐகோர்ட் நீதிபதிகள் விடுத்த எச்சரிக்கை! 

தமிழ்நாட்டில் நிறுவனங்களுக்கு பெயர் வைக்கையில் கீழ்க்கண்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று மதுரை ஐகோர்ட் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி தமிழில் பெயர் வைக்காத நிறுவனங்களுக்கு அதிக அபராதம் விதிக்கப்படும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.

இதன்படி தமிழில் பெயர் வைக்காத நிறுவனங்கள் மீது அதிக அபராதம் விதிக்கப்படும் என்று ஐகோர்ட் நீதிபதிகள் எச்சரிக்கை வெளியிட்டுள்ளனர்.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த வக்கீல் திருமுருகன் என்பவர் மதுரை ஐகோர்ட் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது,

தமிழ்நாட்டில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் பெயர் பலகைகள் தமிழில் தான் எழுதப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு பிறமொழிகளை பயன்படுத்த வேண்டும் என நினைத்தால்  பெயர் பலகையில் தமிழில் பெயரை பெரிய எழுத்தில் எழுதி விட்டு கீழே மற்ற மொழிகளின் பெயர்களை சிறிய எழுத்தில் பயன்படுத்தலாம். இது பற்றிய அரசாணை 1987 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அரசாணையில் கூறப்பட்டுள்ளதற்கு நேர் எதிராக அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் பெயர் பலகைகளில் ஆங்கில எழுத்துக்களை பெரிதாகவும், தமிழ் எழுத்துக்களை சிறிதாகவும் பயன்படுத்தி உள்ளனர். இதனால் தமிழ் மொழியை அவர்கள் அவமதித்து உள்ளனர்.

எனவே அனைத்து மாவட்டங்களிலும் பெயர் பலகைகளில் தமிழ்மொழியை முதன்மையாக எழுதியும், பிற மொழிகளில் அரசாணையில் கூறப்பட்டுள்ள அளவில் பெயரை எழுத வேண்டும் என்று உத்தரவிட வேண்டும். 

இந்த உத்தரவை பின்பற்றாத பன்னாட்டு நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள  வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.  இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு பெயர் பலகைகளில் தமிழ் மொழியை பிரதானமாக பயன்படுத்த வேண்டும் என்ற அரசாணையை 4 மாதத்திற்குள் முழுமையாக அமல்படுத்த வேண்டும் என சில வருடங்களுக்கு முன்னால் உத்தரவிட்டது. அந்த உத்தரவை யாரும் சரிவர பின்பற்றவில்லை.  இது தொடர்பாக உரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.  என்று தெரிவித்தனர்.

இதையடுத்து இந்த மனுவின் மீதான விசாரணை இன்று நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீரா கதிரவன் ஆஜராகி, அரசாணையின்படி பெயர்ப்பலகை வைக்காததற்காக ரூ.50 அபராதமாக வசூலிக்கப்படுகிறது. அபராத தொகையை உயர்த்தி வசூலிக்கும் திட்டம் அரசின் ஒப்புதலுக்காக உள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2022 வரை 6,074 கடைகளில் ரூ.4.58 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. உணவக சட்டப்படி 349 உணவகங்களிடம் இருந்து ரூ.32,800 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. சட்டத்தை முறையாக பின்பற்ற அவ்வப்போது ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார்.

இது பற்றிய முறையான தகவல்களை மதுரை மண்டல தொழிலாளர் துறை இணை கமிஷனர் சுப்பிரமணியன் அரசு தரப்புக்கு தயார் செய்து கொடுத்து இருந்தார்.

இது பற்றி விசாரித்த நீதிபதிகள், இந்த அபராதம் போதுமானதல்ல. இந்த விவகாரத்தில் தீவிரமான நடவடிக்கையும் தேவைப்படுகிறது. எனவே, அபராதத்தை உயர்த்தி வசூலிக்கவும், அரசாணைக்கு எதிராக தொடர்ந்து ஈடுபடுவோர் மீது தீவிர குற்ற நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.