தேசிய இரத்த தான தினம் இன்று கொண்டாடப்படுகின்றது!!! இதை தவிர அக்டோபர் 1 எதற்கு சிறப்பாக இருக்கின்றது!!?

0
27
#image_title

தேசிய இரத்த தான தினம் இன்று கொண்டாடப்படுகின்றது!!! இதை தவிர அக்டோபர் 1 எதற்கு சிறப்பாக இருக்கின்றது!!?

இந்தியா முழுவதும் தேசிய இரத்த தான தினமாக அக்டோபர் 1ம் தேதி கடைபிடிக்கப்படுகின்றது. இதைத் தவிர வேறு சில நிகழ்வுகளும் அக்டோபர் 1ம் தேதியான இன்று கொண்டாடப்படுகின்றது.

தேசிய இரத்த தான தினம்…

உலகம் முழுதும் இரத்த தான தினமாக ஜூன் 14ம் தேதி கடைபிடிக்கப்படும் நிலையில் தேசிய இரத்த தான தினமாக இன்று(அக்டோபர்1) கடைபிடிக்கப்படுகின்றது. இந்நாளில் அனைவரும் தங்களின் இரத்தத்தை தானம் செய்து அனைவருக்கும் இரத்த தானம் ஏன் செய்ய வேண்டும் என்பதை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இரத்த தானம் செய்வதால் நம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். உடல் எடை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் 3 மாதங்களுக்கு ஒரு முறை இரத்த தானம் செய்யலாம். மற்றும் அனைவரும் கண்டிப்பாக 3 மாதங்களுக்கு ஒரு முறை இரத்த தானம் செய்ய வேண்டும். இதனால் நமது உடலுக்கு நன்மைகளை ஏற்படுகின்றது. 40 கிலோவிற்கு மேல் உடல் எடை இருப்பவர்கள் அனைவரும் இரத்த தானம் செய்யலாம்.

தேசிய முடிகள் தினம்(National Hair Day) – அக்டோபர் 1

அக்டோபர் 1ம் தேதியான இன்று தேசிய முடிகள் தினமாக கருதப்படுகின்றது. நியுமி என்ற நிறுவனம் இந்த தேசிய முடிகள் தினத்தை கடந்த 2017ம் ஆண்டு கொண்டு வந்தது. இதன் மூலமாக முடிகளின் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நிறுவனம் தேசிய முடிகள் தினத்தை கொண்டுவந்தது. இந்த தேசிய முடிகள் தினத்தை ஒட்டி நியூமி(NuMe) நிறுவனம் முடிஙளுக்கு பயன்படுத்தும் பொருட்களுக்கு சிறப்பு தள்ளுபடியை அறிவித்து உள்ளது.

சர்வதேச காபி தினம் – அக்டோபர் 1

காபி என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாகும். இதை சிலர் சூடாகவும் அருந்துவார்கள். கோல்ட் காபி என்ற பெயரிலும் அருந்துவார்கள். இந்த காபிக்கும் சிறப்பு தினம் கொண்டாடப்படுகின்றது. அதுவும் இன்று(அக்டோபர்1) சர்வதேச காபி தினம் கொண்டாடப்படுகின்றது. காபி குடிப்பது மூலமாக கிடைக்கும் நன்மைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த சர்வதேச காபி தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. நாமும் நமது பகுதியில் இருக்கும் கடையில் காபி குடித்து சர்வதேச காபி தினத்தை கொண்டாடுவோம்.

இவை தவிர இன்று(அக்டோபர்1) உலக சைவ உணவு நாள், சர்வதேச இசை தினம், சர்வதேச வயதானவர்கள் தினம், சர்வதேச ரக்கூன் பாராட்டு தினம் ஆகியவை இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது.