கிழவியான நயன்தாரா; அதிர்ச்சிக்குள்ளான ரசிகர்கள்!!

நயன்தாராவின் புகைப்படம் பார்க்க கிழவி போல இருப்பதால் ரசிகர்கள் அதிர்ந்துபோயினர்.

பொதுவாக சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை நடிகைகள் தக்கவைத்துக் கொள்வர். அவர்கள் படம் சூப்பர் ஹிட் ஆனாலும் பிலாப் ஆனாலும் அதை அவரது ரசிகர்கள் கொண்டாடி மகிழ்வார்கள்.
அந்த வரிசையில் தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகை நயன்தாரா.

அவர் படம் வரவில்லை என்றாலும் அவரை பற்றிய செய்திகளும், ரூமர்களும் வாராவாரம் வந்துகொண்டே தான் இருக்கும். அது ரசிகர்களிடயே பல சர்ச்சைகளை கிளப்பும். அப்படி தனது நடிப்பாலும் அழகாலும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார் நயன்தாரா. பொதுவாக ஒரு வயதுக்கு மேல் நடிகைகளுக்கு மாார்கெட் சரிந்து விடும். ஆனால் நயன்தாராவிற்கு வயது ஏற ஏற அழகும் ரசிகர்கள் பட்டாளமும் கூடியது.

இதனால் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து அவர் இன்னும் அதே மார்கெட் நம்பர் ஒன்னாக தென்னிந்திய நாயகியாக வலம் வருகிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அவர் நடித்த அண்ணாத்த வெளியாகி வசூலை குவித்தது. அதில் கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு மற்றும் பல முன்னணி நடிகைகள் நடித்திருந்தனர் . இந்த திரைப்படம் வெளியான நாள் தீபாவளி விடுமுறை நேரம் என்பதினால் வசூலை குவித்தது. குடும்பம் மற்றும் தாய்மார்களிடம் இந்த படம் வரவேற்பு பெற்றது.ஏற்கனவே டிரெண்டிங்கில் இருக்கும் நயன்தாராவுக்கு, இந்த படம் வெளியாகிய பின்பு அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கிறது. இதனால் திரும்பவும் நயன்தாரா ஒரு ரவுண்ட் வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நேரத்தில் அவரது புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களை பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. 37 வயதான நடிகை நயன்தாரா அடிக்கடி தனது புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிடுவார்.

அந்த வரிசையில் சமீபத்தில் வெளியான ஒரு புகைப்படம் ரசிகர்களிடம் ஏமாற்றத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைதளங்களில் வெளியான அந்த புகைப்படத்தில் நயன்தாரா பார்ப்பதற்கு கிழவியாகவும் கண்ணங்கள் சுருங்கி வயது முதிர்ந்த தோற்றத்தை போல் இருக்கிறார். இது நயன்தாராவின் ரசிகர்களின் ஆசையை சுக்குநூறாக்கி விட்டது.
இத்தனை நாள் மேக்கப் போட்டுக்கொண்டு ஏமாற்றி விட்டார் என்று ரசிகர்களும் சமூக வலைதளங்களிலும் அவரை கிண்டல் செய்து வருகின்றனர்.

நயன்தாராவிற்கு வயதாகி விட்டது, அவர் நம்மை மேக்கப் போட்டு இத்தனை நாள் ஏமாற்றி விட்டிருக்கிறார் என்று ரசிகர்கள் குமுறிக்கொண்டு இருக்கிறார்கள்.