அம்மா உணவகத்தில் புதிய மாற்றங்கள்!! விலையேற்றம் அவசியமா?

0
137
New changes at Amma Restaurant!! Is pricing necessary?
New changes at Amma Restaurant!! Is pricing necessary?

அம்மா உணவகத்தில் புதிய மாற்றங்கள்!! விலையேற்றம் அவசியமா?

அம்மா உணவகம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் அவரது ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டது. ஏழை, எளிய மக்களுக்காக மலிவு விலையில் உணவை கொடுப்பதற்காக இந்த அம்மா உணவகம், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் தொடங்கப்பட்டு, மக்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

மக்களின் வரவேற்பை பெற்ற காரணத்தினால்  திமுக ஆட்சி அமைந்த பிறகும் அம்மா உணவகங்கள், அதே பெயரில் இயங்கி வருகிறது.  ஆனால் நிதி பிரச்சினை காரணமாக அம்மா உணவகத்தில் ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. இந்த அம்மா உணவகத்தால் பல்வேறு மக்கள் பயன் பெறுவதால் இந்த திட்டத்தை தொடர்ந்து செல்யபடுத்தவும், இதில் மாற்றங்களை கொண்டு வரவும் தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

அதன்படி அம்மா உணவகத்தில் உணவருந்த வருபவர்களிடம் கருத்து கணிப்பு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. அதில் புதிய வகை உணவுகளை அறிமுக படுத்தலாமா? விலையை சற்று அதிகப்படுத்தலாமா? தற்போது இருக்கும் உணவு வகைகள் திருப்தியாக உள்ளதா? பல கேள்விகளை முன்வைத்து கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இதில்  பெரும்பாலான மக்கள் புதிய உணவுகளை அறிமுகபடுத்தலாம் என்றும், மலிவு விலையில் தேநீர் வழங்கலாம் என விருப்பம் தெரிவித்துள்ளனர்.

உணவுகளின் விலையேற்றம் மக்களை பாதிக்காத வகையில் இருக்கலாம் என கூறியுள்ளனர். இந்த கருத்து கணிப்பின் அடிப்படையில் அறிக்கை ஒன்று தயார் செய்து முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. அவர் ஒப்புதல் அளித்த பின்னர் இந்த மாற்றங்கள் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.

மேலும் நிதிப்பற்றாக்குறை தொடர்ந்து இருப்பதால், அம்மா உணவகத்தை தொடர்ந்து நடத்த உணவுகளின் விலையேற்றம், அவசியமாகிறது. புதிய வகை உணவுகளை கொண்டு வரும்போது விலையேற்றம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என கூறப்படுகிறது.

author avatar
CineDesk