புது டி.ஜி.பி. யாக சைலேந்திரபாபு பொறுப்பு! இன்று முதல் பதவி வகிக்கிறார்!

0
80
New DGP Yaga Silenthrababu is responsible! Today is the first post!
New DGP Yaga Silenthrababu is responsible! Today is the first post!

புது டி.ஜி.பி. யாக சைலேந்திரபாபு பொறுப்பு! இன்று முதல் பதவி வகிக்கிறார்!

இவரை நம்ப எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். இணையங்களில் மிக எளிமையான உடற்பயிற்சி செய்து அனைவருக்கும் தோழராக இருப்பவர். இவர் பணியில் இருந்த போது கயவர்களால் கடத்தி செல்லப்பட்ட பல சிலைகளை மீட்டு எடுத்து உள்ளார். இது எல்லாம் நாம் அறிந்த விஷயம் என்றாலும், அவர் பொறுப்பேற்பது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

தமிழகத்தின் புதிய டி.ஜி.பி. யாக பதவி ஏற்கவிருக்கும் டாக்டர் சைலேந்திரபாபு கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறையில் பிறந்தவர். சாதாரண நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். இவரது தந்தை செல்லப்பன். ராணுவத்தில் பணியாற்றி விட்டு, பின்னர் கேரள போக்குவரத்து துறையில் செக்கிங் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து ஓய்வு பெற்றார். அவர் மறைந்து விட்டார். இவரது தாயார் ரத்தினம்மாள். தற்போது இவருக்கு 92 வயது ஆகிறது. இந்த வயதிலும் அவர் தன் சொந்த ஊரில் விவசாயம் செய்து, அவரே சமைத்தும் சாப்பிடுகிறார். இவர் வேளாண்மை பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். மேலும் சட்டப்படிப்பும் படித்துள்ளார். குற்றவியல் பிரிவில் இவர் பி.எச்.டி. முடித்துள்ளார். இவர் தன் பள்ளிப்படிப்பை தனது சொந்த ஊரில் அரசு பள்ளியில், தமிழ் மீடியத்தில் படித்தார். இவர் முன்னாள் ராணுவ வீரர்கள் அமைப்பின் உதவியோடு பட்டப்படிப்பும், வேளாண்மை பல்கலைக்கழக உதவியோடு பட்டமேல்படிப்பும் முடித்துள்ளார்.

தமிழக ஆட்சி மாறிய பிறகு தமிழக முதல்வர் அவர்கள் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் மற்றும் ஐ.பி.எஸ்.அதிகாரிகள் போன்றோரை மாற்றி உள்ளார். அதன் காரணமாக காவல் துறையில் டி.ஜி.பி ஆன பெரிய பதவியில் இவரை பணியமர்த்தி உள்ளார்.

இவர் ஒரு தலைசிறந்த தொழில் முறை அதிகாரி ஆவார். சட்டம் மற்றும் ஒழுங்கை கையாள்வதிலும் சரி, ரவுடிகள் மற்றும் குற்றத்தை தடுக்கும் நடவடிக்கையாக இருந்தாலும் சரி, நிர்வாகம் மற்றும் ஆளுமை திறமையிலும், போலீஸ் மற்றும் பொதுமக்கள் நலத்தை பேணுவதிலும் அவருக்கு, நிகர் அவர் மட்டுமே. இவர் ஒரு  நல்ல பேச்சாளர். இன்றைய வளரும்  இளைஞர்களின் வழிகாட்டி. இவர்அதிகாரம் இல்லாத பதவியில் நியமிக்கப்பட்ட போதும், அவர் துவண்டு போகாமல் அந்த துறையிலும் சாதித்து உள்ளார். தற்போது அவர் ரெயில்வே டி.ஜி.பி.யாக பதவியில் உள்ளார்.

இன்று (புதன்கிழமை) பகல் 12 மணி அளவில் சைலேந்திரபாபு தமிழகத்தின் 30வது டி.ஜி.பி.யாக பதவி ஏற்றார். அவரிடம் பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு, முன்னாள் டி.ஜி.பி. திரிபாதி அவர்கள் விடைபெறுகிறார். இன்று மாலை 4 மணி அளவில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் திரிபாதி அவர்களுக்கு  பிரிவு உபசார விழாவும் நடைபெறுகிறது.