அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு! கொரோனாவால் உயிரிழந்த உடலை வீட்டிற்கு எடுத்து செல்ல அனுமதி!

0
80
Sudden announcement issued by the government! Permission to take home the dead body by Corona!
Sudden announcement issued by the government! Permission to take home the dead body by Corona!

அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு! கொரோனாவால் உயிரிழந்த உடலை வீட்டிற்கு எடுத்து செல்ல அனுமதி!

கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக மக்களை பாதித்து வருகிறது.முதலாம் ஆண்டு தொடக்கத்தில் கொரோனா தீவீரம் ஆகுவதற்கு முன்னதாகவே மத்திய அரசானது முன்னெச்சரிக்கை கட்டுப்பாடுகளுடன் இருந்ததால் அதிக அளவு உயிர் சேதம் ஏதும் நடைபெறவில்லை.அதனையடுத்து நாளடைவில் மக்கள் கொரோனா தொற்று இருப்பதை மறந்து கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காமல் வாழ்ந்து வந்தனர்.அக்காரணத்தினால் மீண்டும் கொரோனா தொற்றானது ருத்ரதாண்டவம் எடுத்து ஆட ஆரம்பித்துவிட்டது.

பல ஆயிரம் கணக்கான உயிர்களையும் இழந்து தவித்து கொண்டிருந்தோம்.அதனையடுத்து மத்திய அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்தது.மக்களின் உயிர்களை காப்பாற்ற தடுப்பூசியும் அமலுக்கு வந்தது.இந்நிலையில் மாநில அரசுகளும் தொற்று அதிகமாக பரவிய காரணத்தினால் மக்களின் நலன் கருதி முழு ஊரடங்கை அமல்படுத்தினர்.பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய,மாநில அரசுகள் அமல்படுத்தியும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியவில்லை.குறிப்பாக டெல்லி,தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் தொற்று பரவல் அசுர வளர்ச்சியடைந்திருந்து.

அப்போது பல ஆயிரம் உறவுகளை இழக்க நேரிட்டது.அவ்வாறு கொரோனா தொற்று காரணத்தினால் உயிரிழந்தவர்களை வீட்டிற்கு எடுத்து சென்று சடங்கு செய்து இறுதி மரியாதை செலுத்த முடியாமல் இருந்தது.மருத்துவமனை ஊழியர்களே இறுதி சடங்கை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டோம்.அதுமட்டுமின்றி இறந்தவர்களை அடக்கம் செய்ய இடமில்லாமல் கூட தவித்து வந்தோம்.உற்றார்,உறவினர்கள் இறந்தவர் பக்கத்தில் கூட வர முடியாமல் இருந்தது.

அத்தோடு கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு இறுதி மரியாதை செலுத்த முடியாமல் மன உளைச்சலுக்கு மக்கள் தள்ளப்பட்டனர்.தற்போது கேரளா அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் சடலத்தை வீட்டிற்கு எடுத்து சென்று 1மணி நேரம் வைத்து சடங்குகள் மற்றும் மரியாதை செய்து தகனம் செய்ய அனுமதி அளித்துள்ளது.இந்த அறிவிப்பானது மக்களுக்கு சந்தோஷத்தையும் தருமாயின் உறவுகளை இழப்பது வரத்ததிற்குரிய விஷியமாகவே கருதப்படுகிறது.தற்போது வரை கேராளவில் கொரோனா தொற்று காரணமாக 104 பேர் உயிரிழந்துள்ளனர்.கொரோனா தொற்று பாதிப்பு குணமடைந்து 10,283 பேர் இல்லம் திரும்பியுள்ளனர்.