பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கப் புதியத் திட்டம்!!

0
77
New plan to prevent violence against women !!
New plan to prevent violence against women !!

பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கப் புதியத் திட்டம்!!

கேரளாவின் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயகக் கட்சியின் முன்னணி ஆட்சி இப்போது கேரளாவில் நடக்கிறது.முதல்வர் பினராயி விஜயன் சமீபத்தில் மக்களிடையே  கூறியது என்னவென்றால்,கொரோனா ஊரடங்கு காலத்தின் போது பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மிகவும் அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. இதுகுறித்து பெண்களைப் பாதுகாக்க “பிங்க்” என்ற பாதுகாப்புத் திட்டம் ஜூலை 19 முதல் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார்.

இந்நிலையில் “பிங்க்” பாதுகாப்புத் திட்டம் இன்று முதல் கேரளாவில் அமல்படுத்த உள்ளது.இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியது என்னவென்றால்,”பிங்க்” பாதுகாப்பு திட்டத்தில் நன்றாகப் பயிற்சி செய்யப் பெற்றப் பெண் போலீஸ் அதிகாரிகள் தான் பணியாற்றுவார்கள்.பாதுகாப்பு திட்டத்தில் தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.வரதட்சனைக் கொடுமை உள்ளிட்ட வன்முறைகளால் பெண்கள் பாதிக்கப்படுவது என்று தெரிந்தால் அது பற்றி விசாரித்து பின் இதிலுள்ள பெண் போலீஸார் சம்பந்தப்பட்டப் பகுதியைச் சேர்ந்த பஞ்சாயத்து உறுப்பினர்கள் மற்றும் பக்கத்து வீட்டினர் அல்லது உள்ளூர் மக்களிடம் விசாரித்து தகவல்களைக்கச் சேகரிப்பார்கள்.

பின்னர் அப்பகுதி காவல் நிலைய போலீசாரிடம் தெரிவிப்பார்கள்,பின்னர் அவர்கள் அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.பேருந்து நிலையங்களில் மற்றும் கல்லூரி வாயில்கள் போன்ற கூட்டம் அதிகமாக உள்ள பகுதிகளில் சாதாரண உடையில் பெண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு பெண்களின் வன்முறை மற்றும் தவறாக நடந்து கொள்வதைக் கண்காணித்து போலீசாரிடம் ஒப்படைப்பார்கள் பின்னர் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

author avatar
Parthipan K