அரையிறுதி வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்த நியுசிலாந்து… அயர்லாந்தை வீழ்த்தி முன்னேற்றம்!

0
116

அரையிறுதி வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்த நியுசிலாந்து… அயர்லாந்தை வீழ்த்தி முன்னேற்றம்!

உலகக்கோப்பை சூப்பர் 12 லீக் தொடரில் இன்று நியுசிலாந்து மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகள் மோதின.

இந்த போட்டியில் முதலில் நியுசிலாந்து அணி பேட்டிங் செய்தது.  அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பின் ஆலன் மற்றும் டெவ்ன் கான்வாய் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர்.

முதல் விக்கெட்டுக்கு அவர் 52 ரன்கள் சேர்த்து சிறப்பான அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். அதன் பின்னர் களமிறங்கிய கேன் வில்லியம்சன் இந்த தொடரில் முதன் முதலாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய அவர் 35 பந்துகளில் 61 ரன்கள் சேர்த்தார்.

சிறப்பாக சென்று கொண்டிருந்த நியுசி அணியின் பேட்டிங்கை சீர்குலைக்கும் வகையில் அயர்லாந்து பவுலர் ஜோஸ்வா லிட்டில் 19 ஆவது ஓவரில் வில்லியம்சன், நீஷம் மற்றும் சாண்ட்னர் ஆகியோரை அவுட் ஆக்கி ஹாட்ரிக் சாதனை படைத்தார். இதனால் நியுசிலாந்து அணி 6 விக்கெட்களை இழந்து 185 ரன்கள் சேர்த்தது.

இதையடுத்து ஆடிய அயர்லாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 150 ரன்கள் மட்டுமே சேர்த்து 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் நியுசிலாந்து அணியின் அரையிறுதி வாய்ப்பு மேலும் பிரகாசமாகியுள்ளது. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அடுத்தடுத்து வெற்றி பெற்றாலும், நியுசிலாந்து நெட் ரன்ரேட் அதிகமாக உள்ளதால் அந்த அணிக்கு பாதிப்பு இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.