சென்னையில் அதிவிரைவாக உருவாக்கப்படும் புதிய காடு:செடியின் பெயர் தெரியுமா?

0
69

ஜப்பானை சேர்ந்த தாவரவியலாளர் மற்றும் தாவர வளர்ப்பு வள்ளூரான அகிரா மியாவாகி என்பவர்,அகிரா மியாவாகி என்னும் செடியை உருவாக்கி வளர்க்கும் முறைக்கு மியாவாகி தொழில்நுட்பம் பெயரிடுள்ளார். இவர் உலகம் முழுக்க சென்று தனது தொழில்நுட்பத்தை கற்றுக்கொடுத்து வந்துள்ளார்.

இவர் 92 வயது கொண்டவர். 1993ல் இருந்தே உலகம் முழுக்க பல்வேறு பெருநகரங்களுக்கு சென்று தனது அனுபவத்தை கொண்டு, காடுகளை வேகமாக உருவாக்குவது, மரங்களை வேகமாக வளர்ப்பது எப்படி என்று கற்றுக்கொடுத்து வருகிறார்.

ஒரு குறிப்பிட்ட இடத்தில் வேகமாக மரங்களை வளர்க்கும் முறையே மியாவாகி தொழிநுட்பம் என்பதாகும்.மரங்கள் சாதாரணமாக வளரும் வேகத்தை விட இந்த மியாவாகி தொழில்நுட்பம் மூலம் 10 மடங்கு அதிக வேகமாக வளரும் தன்மையும், 30 மடங்கு அடர்த்தியாக இதன் மூலம் மரங்கள் வளரும் என்றார். ஒரே இடத்தில் அருகருகே நிறைய உள்ளூர் மரங்களை நடுவது இந்த தொழில்நுட்பம் ஆகும்.

 

வெறும் 20 வருடங்களில் மியாவாகி மூலம் ஒரு குறிப்பிட்ட இடத்தை காடுகளாக உருவாக்கலாம். இதை 3 வருடங்களுக்கு பின் கவனிக்க வேண்டியதே இல்லை. இதனால்  உலக நாடுகள் மியாவாகி தொழில்நுட்பம் மீது கவனம் செலுத்துகிறது.

இந்தியாவில் பெங்களூர் போன்ற பெருநகரங்களில் மியாவாகி தொழில்நுட்பத்தை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இந்த நிலையில் சென்னையில் மியாவாகி தொழில்நுட்பம் மூலம் குட்டி காடு ஒன்றை உருவாக்க முடிவு செய்துள்ளனர். இரண்டு காடுகள் உருவாக்கிய நிலையில் , மூன்றாவது காடாக உருவாக்க இருக்கிறது. சென்னையில் கோட்டூர்புரம் மற்றும் அடையார் பகுதிகளில் இரண்டு புதிய காடுகள் உருவாக்கப்பட்டு ,வளர்க்கும் பணியில் இடுபட்டு வருகின்றனர்.
அவை அடையாரில் 2000 செடிகள் நடப்பட்டு பராமரித்து வருகிறது. மொத்தம் 40 வகையான செடிகள் அடையாரில் நடப்பட்டு இருக்கின்றனர்.20 ஆயிரம் சதுர அடிக்கு அடையார் காடு உருவாக்கப்பட்டு வருகிறது. இன்னொரு பக்கம் வளசரவாக்கத்தில் மொத்தம் 700 செடிகள் நடப்பட்டு உள்ளது. இங்கு 45 வகையான செடிகள் நடப்பட்டுள்ளது. மொத்தம் 6 ஆயிரம் சதுர அடிக்கு இங்கு செடிகள் நடப்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன் உருவாக்கப்பட்ட இந்த காடுகள் தற்போது வேகமாக வளர தொடங்கி உள்ளனர். இதனால் சென்னையில் வேறு இடங்களிலும் இதை பயன்படுத்த உள்ளனர்.

ஆலந்தூரில் உருவாக்கப்படும் இந்த காடு மட்டும் மொத்தம் 11.7 டன் கார்பன் டை ஆக்ஸைடை (CO2)ஒரே வருடத்தில் எடுக்கும் என்பது முக்கியத்துவமானது. . 4 டன் ஆக்சிஜனை அடுத்த வருடத்திற்குள் இது வெளிப்படுத்தும். சென்னையின் வெப்பத்தை இது குறைக்க உதவும். விரைவில் போதிய அளவில் நிலங்களை பெற்று சென்னையின் மற்ற இடங்களிலும் இந்த குட்டி மியாவாகி காடுகளை உருவாக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

 

author avatar
Parthipan K