100 கோடி தடுப்பூசிகள் செலுத்தி இந்தியா சாதனை..புதுச்சேரி ஆளுநர் தமிழிசை வாழ்த்து.!!

100 கோடி தடுப்பூசிகள் செலுத்தி இந்தியா சாதனை..புதுச்சேரி ஆளுநர் தமிழிசை வாழ்த்து.!!

நம் நாட்டிலேயே கரோனா தடுப்பூசி தயாரிக்கப்பட்டு அதை செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 100 கோடியை தாண்டி சாதனைப்படுத்தி வந்துள்ளது என்று தமிழிசை அவர்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து,புதுச்சேரி கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், மக்கள் தொகை அதிகம் கொண்டுள்ள நம் நாட்டில் கரோனா தடுப்பூசிகளை செலுத்தி விட முடியுமா? என்று கேட்டு கொண்டிருந்த மற்ற நாடுகளுக்கு முன் இன்று 100 கோடி தடுப்பூசிகளை செலுத்தி சாதனை படைத்துள்ளது நம் தாய் நாடு . இந்தியாவில், கரோனா … Read more

இன்றுடன் முடிவடைகிறது..டி20 உலகக் கோப்பைக்கான தகுதிச்சுற்று போட்டிகள்.!

இன்றுடன் முடிவடைகிறது..டி20 உலகக் கோப்பைக்கான தகுதிச்சுற்று போட்டிகள்.!

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறுகிறது. கடந்த 2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட டி20 உலகக் கோப்பையை முதல் முதலில் இந்தியா வென்றது. 2009-ல் பாகிஸ்தான், 2010-ல் இங்கிலாந்து, 2012 & 2016-ல் மேற்கிந்திய தீவுகள், 2014-ல் இலங்கை அணியும் இதுவரை உலகக்கோப்பையை வென்றுள்ளன. இன்று அக்டோபர் 17-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 14-ஆம் தேதி வரை … Read more

சீனாவில் மீண்டும் அதிகரித்த கொரோனா தொற்று..ஊரடங்கை அறிவித்த சீன அரசு.!!

சீனாவில் மீண்டும் அதிகரித்த கொரோனா தொற்று..ஊரடங்கை அறிவித்த சீன அரசு.!!

சீனாவில் மீண்டும் கொரனோ வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால் பள்ளிகளை மூட அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் உருவான கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கி பல உயிர்களை காவு வாங்கியுள்ளது. இதன் காரணமாக அனைத்து நாடுகளும் கொரோனாவில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார மையம் வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில், சீனாவின் மீண்டும் கொரோனா … Read more

எதிர்க்கட்சித் தலைவரின் உருவ பொம்மையை எரித்த சசிகலாவின் ஆதரவாளர்கள்! திருவாரூரில் பரபரப்பு!

எதிர்க்கட்சித் தலைவரின் உருவ பொம்மையை எரித்த சசிகலாவின் ஆதரவாளர்கள்! திருவாரூரில் பரபரப்பு!

கடந்த 1972 ஆம் வருடம் மறைந்த முன்னாள் முதலமைச்சரும் அதிமுகவின் நிறுவனருமான எம்ஜிஆர் அவர்களால் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் நிறுவப்பட்டது. அந்த கட்சி தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு தமிழகத்தில் ஆங்காங்கு அந்த கட்சியை சார்ந்தவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதே போல தமிழகம் முழுவதும் மாவட்டந்தோறும் இந்த 50வது பொன்விழா ஆண்டை அதிமுகவைச் சேர்ந்தவர்கள் மிக சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள். இதற்கிடையில் சமீபத்தில் அதிமுகவின் நிறுவனர் எம்ஜிஆர் அவர்கள் வாழ்ந்த சென்னை ராமாபுரம் … Read more

இன்று காலை 10 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றும் பிரதமர் மோடி.!! முக்கிய அறிவிப்பா.?

இன்று காலை 10 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றும் பிரதமர் மோடி.!! முக்கிய அறிவிப்பா.?

பாரத பிரதமர் மோடி இன்று காலை 10 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார் ன. பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து பிரதமர் மோடி இன்று காலை 10 மணிக்கு பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவில் தற்போது வரை 100 கோடி டோஸ்களுக்கும் அதிகமான தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. 100 கோடி மைல்கல்லை இந்தியா நேற்று தான் எட்டியது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் இதுவரை 71,09,80,686 பேருக்கு … Read more

சின்னம்மாவை அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது! சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியனின் துணிச்சல் பேட்டி!

சின்னம்மாவை அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது! சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியனின் துணிச்சல் பேட்டி!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா அதிமுகவின் நிறுவனர் எம்ஜிஆர் அவர்கள் வாழ்ந்த ராமாவரம் இல்லத்தில் அதிமுகவின் கொடியை ஏற்றி வைத்து அங்கு கல்வெட்டு செதுக்கி அதில் தன்னுடைய பெயரை அதிமுகவின் பொதுச் செயலாளர் என்று எழுதியிருந்தார். இது அதிமுகவினர் இடையே கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியது, இதற்கு அதிமுக தரப்பில் கடுமையான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜெயலலிதா தோழி சசிகலா … Read more

மாணவர் நலன் கருதி பள்ளிக்கல்வி துறையின் அதிரடி முடிவு!

மாணவர் நலன் கருதி பள்ளிக்கல்வி துறையின் அதிரடி முடிவு!

மாணவர்களின் நலன் கருதி பள்ளிக்கல்வித்துறை பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது, அதில் ஒன்று தான் ‘இல்லம் தேடி கல்வி’. இந்த திட்டமானது சில தினங்களுக்கு முன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். இதன்மூலம் 1 முதல் 8 வகுப்பு மாணவர்களுக்கு மாலை பள்ளி முடிந்ததும் தன்னார்வலர்கள் மூலம் சிறப்பு வகுப்புகள் போல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் முதல் பணியாக கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிப்படிப்பிலிருந்து இடை நின்ற மாணவர்கள் கண்டறியப்பட்டு வருகின்றனர். … Read more

இனி இது போன்ற துயர சம்பவங்கள் நடக்க கூடாது! மத்திய வெளியுறவுத் துறைக்கு கோரிக்கை வைத்த முதலமைச்சர்!

இனி இது போன்ற துயர சம்பவங்கள் நடக்க கூடாது! மத்திய வெளியுறவுத் துறைக்கு கோரிக்கை வைத்த முதலமைச்சர்!

காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த சமயத்தில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான மத்திய அரசு இலங்கைக்கு கச்சத்தீவை தாரை வார்த்தது அதில் இருந்து தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சொல்லமுடியாத துயரங்களை சந்தித்து வருகிறார்கள். இது காலம் காலமாக முடியாத தொடர்கதையாக தொடர்ந்து வருகிறது. மீனவர்கள் தாக்கப்படுவதும், கைதுசெய்யப்படுவதும் அவர்களுடைய உடமைகள் சேதப்படுத்தபடுவது, போன்ற அட்டூழியங்களை இலங்கை கடற்படை மிகவும் தைரியமாக செய்து வருகிறது. இதுதொடர்பாக மீனவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு பல கோரிக்கைகளை முன்வைத்தும் … Read more

தீபாவளிக்கு டிரஸ் எடுத்தால் ஆடு இலவசம்.. துணிக்கடையின் அதிரடி ஆஃபர்.!!

தீபாவளிக்கு டிரஸ் எடுத்தால் ஆடு இலவசம்.. துணிக்கடையின் அதிரடி ஆஃபர்.!!

வரும் நவம்பர் 4ம் தேதி தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது தீபாவளி பண்டிகை என்றாலே புதுதுணிகளுக்கு முதலிடம் தான். அத்தகைய புதுத் துணிகளை விற்பனை செய்யும் துணிக்கடைகள் அதிகரித்துள்ளன. இது போன்ற பண்டிகைக் காலங்களில் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக துணிக்கடைகள் பல்வேறு ஆஃபர் மற்றும் பரிசுப் பொருட்களை அறிவிப்பது வழக்கம் அதில் துணிவகைகள் வீட்டு உபயோகப் பொருட்களை பரிசாக அறிவித்து பரிசு குலுக்கல் மூலம் வாடிக்கையாளர்களை மகிழ்வித்து வருகிறார்கள். அந்த வகையில் வித்தியாசமாக திருவாரூரில் சாரதாஸ் என்ற … Read more

ரூ.100 தொட்ட டீசல் விலை.!! பெட்ரோல், டீசல் இன்றைய விலை நிலவரம்.!!

ரூ.100 தொட்ட டீசல் விலை.!! பெட்ரோல், டீசல் இன்றைய விலை நிலவரம்.!!

சென்னையில் தொடர்ந்து கடந்த சில நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயந்துள்ளது. உலகளாவிய சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. அதன்படி, கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. அதன் காரணமாக தற்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100 தாண்டியுள்ளது. இந்நிலையில் தமிழக … Read more