எதிர்க்கட்சித் தலைவரின் உருவ பொம்மையை எரித்த சசிகலாவின் ஆதரவாளர்கள்! திருவாரூரில் பரபரப்பு!

0
69

கடந்த 1972 ஆம் வருடம் மறைந்த முன்னாள் முதலமைச்சரும் அதிமுகவின் நிறுவனருமான எம்ஜிஆர் அவர்களால் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் நிறுவப்பட்டது. அந்த கட்சி தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு தமிழகத்தில் ஆங்காங்கு அந்த கட்சியை சார்ந்தவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதே போல தமிழகம் முழுவதும் மாவட்டந்தோறும் இந்த 50வது பொன்விழா ஆண்டை அதிமுகவைச் சேர்ந்தவர்கள் மிக சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள்.

இதற்கிடையில் சமீபத்தில் அதிமுகவின் நிறுவனர் எம்ஜிஆர் அவர்கள் வாழ்ந்த சென்னை ராமாபுரம் இல்லத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா அதிமுகவின் கொடியை ஏற்றி வைத்து அங்கு கல்வெட்டில் தன்னுடைய பெயரை அதிமுகவின் பொதுச் செயலாளர் என்று பொரித்து வைத்திருந்தார். இது அதிமுகவினர் இடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது
.

இதற்கு அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் பலரும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும், கடுமையான கண்டனங்களை தெரிவித்தார்கள். அதோடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் சசிகலா அவர்களை தகாத வார்த்தையில் பேசியதாக சொல்லப்படுகிறது.அத்துடன் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஒரு படி மேலே சென்று சசிகலா மீது காவல்துறையில் புகார் மனுவையும் அளித்தார்.

சசிகலா சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஆகவே திருவாரூர் மாவட்டத்தில் திமுகவிற்கு அடுத்தபடியாக செல்வாக்கு மிக்க ஒருவராக திகழ்ந்து வருபவர் சசிகலா ஆகவே அவருக்கு அங்கேயே சற்றே செல்வாக்கு அதிகம் என்று சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், எடப்பாடி பழனிச்சாமியின் பேச்சை கண்டிக்கும் விதமாக திருநெல்வேலி மாவட்டம் வண்ணாரப்பேட்டையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் அதிமுக கொடியுடன் எடப்பாடி பழனிச்சாமியின் உருவபொம்மையை எரிக்க முயற்சி செய்தார்கள். இதனைக் கண்டு காவல்துறையினர் சுதாரித்துக்கொண்டு ஓடிவந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் வைத்திருந்த உருவபொம்மை உள்ளிட்டவற்றை அவர்களிடமிருந்து கைப்பற்ற முயற்சி செய்தார்கள். இதனால் காவல்துறையை சார்ந்தவர்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும், இடையே தள்ளுமுள்ளு உண்டானதாக தெரிகிறது.

அதன் பின்னர் உருவபொம்மையை கைப்பற்றிய காவல்துறையினர் அங்கிருந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் உள்ளிட்டோரை திருப்பி அனுப்பி வைத்தார்கள் இதனை தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தொண்டர்கள் எடப்பாடி பழனிச்சாமியின் உருவபொம்மையை எரித்து போராட்டத்தில் குதித்தார்கள். இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.