குழந்தைகளுக்கு இனி ஹார்லிக்ஸ் பூஸ்ட் போன்விட்டா வேண்டாமே! 15 பொருட்கள் அடங்கிய ஊட்டச்சத்து பவுடர் போதுமே!!

0
209
No more Horlicks Boost Bonvita for kids! Nutrient powder containing 15 ingredients is enough!!
No more Horlicks Boost Bonvita for kids! Nutrient powder containing 15 ingredients is enough!!

குழந்தைகளுக்கு இனி ஹார்லிக்ஸ் பூஸ்ட் போன்விட்டா வேண்டாமே! 15 பொருட்கள் அடங்கிய ஊட்டச்சத்து பவுடர் போதுமே!!

குழந்தைகளுக்கு நல்லது என்று கொடுக்கும் ஹார்லிக்ஸ் பூஸ்ட் போன்விட்டா போன்ற பொருட்களில் இரசாயனம் கலந்திருக்கும் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.நம் பாட்டி காலத்தில் பருப்பு,தானியங்களை அரைத்து கஞ்சி போல் காய்ச்சி குழந்தைகளுக்கு கொடுப்பார்கள்.அது தான் ஹெல்தியும் கூட.

ஆனால் இன்று அனைவரின் லைஃப் ஸ்டைலும் மாறி விட்டது.காலத்திற்கேற்றார் போல் வாழத் தொடங்கி விட்டதால் பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த தவறுகின்றனர்.இதன் விளைவே ஊட்டச்சத்து குறைபாடு.இது போன்ற பிரச்சனைகள் வராமல் இருக்க வேண்டும் என்றால் மீண்டும் பழைய பழக்கங்களை கொண்டு வர வேண்டும்.

ஆரோக்கியமான ஊட்டச்சத்து பவுடர் தயாரிக்கும் முறை:

தேவையான பொருட்கள்:-

1)சிவப்பு அவல் – 250 கிராம்
2)பனங்கிழங்கு – 5
3)குதிரைவாலி – 250 கிராம்
4)சோயா – 200 கிராம்
5)வர பட்டாணி – 50 கிராம்
6)பூசணி விதை – 50 கிராம்
7)ஜாதிக்காய் – 2
8)அமுக்கரா கிழங்கு – 100 கிராம்
9)சுக்கு – 1 துண்டு
10)ஏலக்காய் – 2
11)முருங்கை பருப்பு – 50 கிராம்
12)வேர்க்கடலை – 250 கிராம்
13)பார்லி அரிசி – 200 கிராம்
14)பச்சை பயறு – 200 கிராம்
15)பாதாம் பருப்பு – 250 கிராம்

செய்முறை:-

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் சொல்லிய அளவுப்படி எடுத்துக் கொள்ளவும்.பனங்கிழங்கு,ஏலக்காய் தவிர்த்து இதர பொருட்களை வெயிலில் நன்கு காயவைத்து எடுத்துக் கொள்ளவும்.

பனங்கிழங்கை மட்டும் இட்லி பாத்திரத்தில் போட்டு வேகவிட்டு வெயிலில் காயவைத்து எடுத்துக் கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் ஒரு வாணலி வைத்து வெயிலில் உலர்த்திய அனைத்து பொருட்களையும் வாசனை வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.வறுக்கும் பொழுது கருகிடக் கூடாது என்பதில் கவனமாக இருங்கள்.

இந்த பொருட்களை சூடு ஆறும்படி விட்டு பின்னர் மிக்ஸி ஜாரில் போடவும்.பின்னர் வாசனைக்காக இரண்டு ஏலக்காய் சேர்த்து அரைத்து பவுடராக்கி கொள்ளவும்.இதை ஒரு அகலமான தட்டில் கொட்டி ஆற விட்டு ஈரமில்லாத பாட்டிலில் கொட்டி சேமித்துக் கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை:-

ஒரு கிண்ணத்தில் அரைத்த ஊட்டச்சத்து பவுடர் 2 தேக்கரண்டி அளவு கொட்டி 4 தேக்கரண்டி தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1 1/2 கிளாஸ் பால் ஊற்றவும்.பின்னர் கரைத்த ஊட்டச்சத்து பவுடரை ஊற்றி மிதமான தீயில் 5 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.

பிறகு இதை ஒரு கிளாஸிற்கு ஊற்றி சுவைக்காக பனங்கற்கண்டு அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

இந்த ஊட்டச்சத்து மிக்க பால் குழந்தைகளின் மூளை மற்றும் உடல் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.