அரசியலுக்கு வந்தவுடன் யாரும் ஆட்சியை பிடிக்க முடியாது! நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேட்டி!!

0
31
#image_title

அரசியலுக்கு வந்தவுடன் யாரும் ஆட்சியை பிடிக்க முடியாது! நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேட்டி!!

நடிகர் விஜய் அரசியலில் களமிறங்கவுள்ளதாக பரவி வரும் தகவல்களுக்கு சீமான் அவர்கள் சமீபத்திய பேட்டியில் அரசியல் கட்சி தொடங்கிய தேர்தலில் நின்றால் உடனே யாரும் ஆட்சியை பிடிக்க முடியாது என்று கூறியுள்ளார்.

நேற்று(நவம்பர்1) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படத்தின் வெற்றிவிழா நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் அவர்கள் பேசிய பொழுது பல கேள்விகள் கேட்கப்பட்டது. அப்பொழுது 2026 என்று கேட்ட கேள்விக்கு நடிகர் விஜய் “கப்பு முக்கியம் பிகிலு” என்று கூறினார்.

இதனால் நடிகர் விஜய் அவர்கள் 2026ம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடுவார் என்று தகவல்கள் பரவி வருகின்றது. நடிகர் விஜய் அவர்களும் தன்னுடைய விஜய் மக்கள் இயக்கமாக மூலமாக தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் உள்ள மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றார். இந்நிலையில் நேற்று(நவம்பர்1) நடைபெற்ற சக்ஸஸ் மீட்டில் நடிகர் விஜய் கூறிய இந்த பதில் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது தொடர்பாக “அரசியல் கட்சி தொடங்குவது என்பது நடிகர் விஜய் அவர்களின் கனவு ஆகும். நடிகர் விஜய் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். கட்சி தொடங்கவிருக்கும் நடிகர் விஜய் அவர்களின் முதுகுக்கு பின்னால் செய்ய வேண்டியது தட்டிக் கெடுப்பது மட்டும் தான்.

முன்னாள் முதல்வர் மறைந்த எம்.ஜி.ஆர் போல கட்சி தொடங்கி அரசியலுக்கு வந்தவுடன் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது என்பது எளிமையான செயல் இல்லை. கட்சி தொடங்கியவுடன் வெற்றி பெற்றால் அது பெரும்புரட்சிதான். நாங்கள் யாரோடும் கூட்டணி வைக்கவில்லை. வேண்டும் என்றால் யார் வேண்டுமானாலும் எங்களுடன் கூட்டணி வைக்கலாம்” என்று கூறினார்.