“No parking Rules” இனிமேல் இது தெரியாமல் வண்டியை நிறுத்தாதீர்கள்!! பிறகு உங்களுக்கு தான் சிரமம்!!

0
59

“No parking Rules” இனிமேல் இது தெரியாமல் வண்டியை நிறுத்தாதீர்கள்!! பிறகு உங்களுக்கு தான் சிரமம்!!

இருசக்கர வாகனத்தில் ஒரு இடத்திற்கு செல்லும் போது நோ பார்க்கிங் இருந்தால் அங்கே வண்டியை நிறுத்த மாட்டோம். அதுவே ஒரு சில இடங்களில் நோ பார்க்கிங் இல்லை என்று இருந்தால் வண்டியை நிறுத்தலாம் என்று நம்முடைய வாகனத்தை அங்கு நிறுத்துவோம்.

ஆனால் நோ பார்க்கிங் போர்ட் இல்லை என்றாலும் ஒரு சில பகுதிகளில் வண்டிகளை நிறுத்துவது குற்றமாகும். அது எங்கெங்கு என்றால் விபத்துக்கு உள்ளான பகுதிகள், நடைபாதை, ஒரு இடத்தில் அதன் உரிமையாளரிடம் கூறாமல் வண்டியை நிறுத்துவது, பஸ் ஸ்டாப் பக்கத்தில், மெயின் ரோட்டில், ஒரு வழிச்சாலையில் மற்றும் கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களில் வண்டிகளை நிறுத்துவது குற்றமாகும். இது நிறைய பேருக்கு தெரியாத ஒன்றாகும். இது மோட்டார் வாகன சட்டம் செக்ஷன் 122 இன் கீழ் இருக்கிறது.

அனைத்தையும் மீறி இது போன்ற இடங்களில் வண்டியை நிறுத்தினால் அபராதம் விதிக்கப்படும். நகரமாக இருந்தால் 200 ரூபாயும் கிராமமாக இருந்தால் ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்படும். இதுபோல நோ பார்க்கிங் போர்ட் இருந்து அங்கே வண்டியை நிறுத்தி இருந்தால் வண்டியை எடுத்துக்கொண்டு அவர்களுக்கு தகவலை கொடுத்து அவர்கள் வந்து அபராதம் கட்டி முடித்த பிறகு வண்டியை திருப்பி தந்து விடுவார்கள்.

இவ்வாறு நாம் வண்டியை எடுத்து செல்லும்போது அவர்களிடம் இன்சூரன்ஸ்சோ அல்லது அவர்கள் மது அருந்திவிட்டு வண்டியை ஓட்டியிருந்தாலோ அவர்கள் வாகனத்தை போலீசார் எடுத்துக்கொண்டு சென்று விடுவார்கள் அடுத்த நாள் அவர்கள் வந்து அபராதம் கட்டிவிட்டு வண்டியை திரும்ப எடுத்துச் செல்லலாம்.

சில பேர் வண்டியை எடுத்துக்கொண்டு சென்ற பிறகும் அதைப் பற்றி கவனிக்காமல் எந்த ஒரு தகவலும் கொடுக்காமல் அபராத தொகையும் விதிக்காமல் இருப்பார்கள். அவ்வாறு இருப்பவர்களின் வண்டிகளை சில நாட்களுக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஒப்படைத்து விடுவார்கள் பிறகு உரிமையாளர்கள் நீதிமன்றத்திற்கு சென்று தான் வண்டியை திரும்ப எடுக்க முடியும்.

author avatar
CineDesk