இனி இங்கும் விசா இல்லாமல் செல்லலாம்! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசு!!

0
268
#image_title

இனி இங்கும் விசா இல்லாமல் செல்லலாம்! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசு!!

இந்தியாவில் இருந்து ஏற்கனவே சில நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம் என்று அறிவிப்புகள் வெளியாகி இருந்த நிலையில் தற்பொழுது மற்றொரு நாடும் அந்த பட்டியலில் இணைந்துள்ளது.

அதாவது தற்பொழுது இந்தியாவில் இருந்து விசா இல்லாமல் வரலாம் என்று ஈரான் அரசாங்கம் தான் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது இந்தியா மட்டுமில்லாமல் 33 நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஈரான் நாட்டுக்கு விசா இல்லாமல் சுற்றுலா வரலாம் என்று தற்பொழுது அறிவித்துள்ளது.

மேற்காசிய நாடுகளில் ஒன்றாக இருக்கும் ஈரான் நாட்டில் நேற்று அதாவது டிசம்பர் 15ம் தேதி அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இதில் 33 நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் விசா இல்லாமல் ஈரான் நாட்டுக்கு வரலாம் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அந்நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.

அமைச்சரவை கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஈரான் நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சர் எஸதுல்லாஹ் சர்காமி அவர்கள் இது தொடர்பாக “ஈரான் நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த பல்வேறு வகையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக இந்தியா உள்பட 33 நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஈரான் நாட்டுக்கு விசா இல்லாமல் வரலாம் என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது” என்று கூறினார்.

சில வாரங்களுக்கு முன்னர் மலேசியா, இலங்கை, வியட்நாம் ஆகிய நாடுகள் இந்தியாவை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் விசா இல்லாமல் தங்கள் நாட்டுக்கு வரலாம் என்று அறிவித்திருந்த நிலையில் அந்த பட்டியலில் தற்பொழுது ஈரான் நாடும் இணைந்துள்ளது.

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றது என்று மெக்கின்ஸே ஆய்வு அறிக்கை கூறுகின்றது. கடந்த 2022ம் ஆண்டில் 1.30 கோடி பேர் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.