தேன் கலந்த சின்ன வெங்காயம்! அடடே இதில் இத்தனை பயன்களா?

0
72

தேன் கலந்த சின்ன வெங்காயம்! அடடே இதில் இத்தனை பயன்களா?

தேன் மற்றும் சின்ன வெங்காயம் இவை இரண்டும் உடலுக்கு மிகவும் நல்லது.மூச்சுப் பிரச்சனை உள்ளவர்கள் ஆஸ்துமா ,சளி தொல்லை, நுரையீரல் பிரச்சனை போன்றவர்களுக்கெல்லாம் ஒரே தீர்வு சின்ன வெங்காயமும் தேனும் தான். இரவு நேரங்களில் இந்த தேன் மற்றும் சின்ன வெங்காயத்தை சாப்பிட்டால் காலையில் மலத்தின் மூலம் நெஞ்சில் இருக்கும் சளி அனைத்தும் வெளியேறிவிடும். குறிப்பாக வெங்காயச்சாரையும் தேனையும் சம அளவு கலந்து சாப்பிட்டு வர நெஞ்சு சளி முற்றிலும் குணமாகும். இதே போல தினமும் காலை நேரத்தில் சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகள் அனைத்தும் வெளியேற்றி விடும். பத்தோடு பருமனாக உள்ளவர்கள் தினமும் காலை நேரத்தில் சாப்பிட்டு வந்தால் உடல் எடையும் இடுப்பை சுற்றி உள்ள சதையும் விரைவிலேயே குறைவதை பார்க்கலாம்.

 

எப்படி செய்வது?

 

ஒரு கண்ணாடி பாத்திரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.

அந்த கண்ணாடி பாத்திரத்தில் 50 முதல் 100 கிராம் அளவிற்கு உரித்த சின்ன வெங்காயத்தை கீறி போட்டுக்கொள்ள வேண்டும்.

சின்ன வெங்காயம் மூழ்கும் அளவிற்கு சுத்தமான தேனை அதனுள் ஊற்ற வேண்டும்.

இரண்டு நாட்கள் அதனை கைப்படாமல் நன்கு ஊற விட வேண்டும்.

இரண்டு நாட்கள் கழித்து பார்த்தால் தீனும் சின்ன வெங்காயமும் நன்கு ஒன்றோடு ஒன்று ஊறி இருக்கும்.

இப்பொழுது இது சாப்பிட தயாராகி விட்டது தினந்தோறும் இதனை உண்டு வர உடலில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் குணமாகும்.