கொரோனா தடுப்பு நடவடிக்கை! மாநிலத்தில் செயல்படுத்தப்பட்ட அற்புத திட்டம்!

0
61

கர்நாடக மாநிலத்தில் ஒரு நாளைக்கு 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நோய் தொற்றினால் பாதிக்கப்படுகிறார்கள் என்று தகவல் கிடைத்திருக்கிறது. இதனால் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் மற்றும் படுக்கைகள் உள்ளிட்டவைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.இதன் காரணமாக, அந்த மாநிலத்தில் ஆக்சிஜன் பொருத்தப்பட்ட பேருந்துகள் தயாராகி இருக்கின்றன. இந்த திட்டத்தை அந்த மாநிலத்தின் முதலமைச்சர் எடியூரப்பா அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்.

ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக, இனி கர்நாடக மாநிலத்தில் எந்த ஒரு மரணமும் நிகழக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் இந்த பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதாக எடியூரப்பா தெரிவித்திருக்கிறார்.மருத்துவமனைகளுக்கு வெளியில் உயிருக்கு போராடும் நோயாளிகளை காப்பாற்றுவதற்காக இந்த பேருந்துகள் வடிவமைக்கப்பட்ட இருப்பதாகவும் முதல்கட்டமாக கர்நாடகத்தில் 20 மாநகராட்சி பேருந்துகள் ஆக்சிஜன் பேருந்துகளாக வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும்,அந்த மாநிலத்தின் முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்திருக்கிறார்.

அனைத்துப் பேருந்துகளிலும் எட்டு ஆக்சிஜன் சிலிண்டர்கள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கும் நோயாளிகளையும், மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் தவித்துக்கொண்டு இருப்போரையும் இந்த பேருந்து விரைந்து சென்று காப்பாற்றும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

முதல்கட்டமாக பெங்களூருவில் அரசு மருத்துவமனைகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இன்னும் ஒரு வாரத்திற்குள் மாநில முழுவதும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று அந்த மாநிலத்தின் முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்திருக்கிறார்.