பெண் பிள்ளைகள் வைத்திருக்கும் பெற்றோர்களே.. மாதம் ரூ.35,000 கிடைக்கும் இந்த திட்டம் பற்றி தெரியுமா?

0
222
#image_title

பெண் பிள்ளைகள் வைத்திருக்கும் பெற்றோர்களே.. மாதம் ரூ.35,000 கிடைக்கும் இந்த திட்டம் பற்றி தெரியுமா?

பெண்களின் வளர்ச்சியை வைத்து ஒரு நாட்டின் வளர்ச்சியை தீர்மானிக்கலாம்.. முன்பு போல் அல்லாமல் இன்று பெண்கள் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகின்றனர்.

பெண்களின் கல்வித் தரம் ஆண்களை விட பல மடங்கு அதிகமாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம் பெண் பிள்ளைகளின் கல்வி தரத்தை உயர்த்த மத்திய மற்றும் மாநில அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் தான்..

அதிலும் ஒரு பெண் பிள்ளை வைத்திருப்பவர்களுக்கு.. அவர்களின் மேல் படிப்பை மேற்கொள்ள மாதம் ரூ.35000 வரை பெல்லோஷிப் வழங்கப்பட்டு வருகிறது.

“சாவித்திரிபாய் ஜோதிராவ் பூலே ஃபெல்லோஷிப்” என்ற பெயரில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மொத்தம் 5 ஆண்டுகளுக்கு இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற முடியும்.

இந்த திட்டத்திற்கு தகுதி…

வீட்டில் ஒரு பெண் பிள்ளைகள் இருப்பவர்கள் மட்டும் தான் விண்னப்பம் செய்ய முடியும்.

இரண்டு பெண் பிள்ளைகள் இருந்தால் ஒரு பிள்ளை இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற முடியும்.

ஆண் பிள்ளைகளுக்கு இந்த திட்டம் பொருந்தாது. பெண் பிள்ளை மற்றும் ஆண் பிள்ளை இருந்தால் இந்த திட்டத்தில் சேர முடியாது.

பெண் பிள்ளைகள் மேற்படிப்பிற்காக இந்த திட்டத்தின் மூலம் அவர்களுக்கு ஃபெல்லோஷிப் வழங்கப்படும்.

மத்திய அரசு செயல்படுத்தி வரும் இந்த திட்டத்திற்கு ரூ.100 செலுத்தி மாஜிஸ்திரேட்டிடம் ஒரு உறுதிமொழி பத்திரமாக வாங்கி பெற்றோர்.. அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த திட்டத்தில் சேர தேவைப்படும் ஆவணங்கள்…

1)ஆதார் எண்
2)வங்கி கணக்கு எண்
3)தொலைபேசி எண்

ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ (இரண்டு வருடம்) – மாதம் ரூ.31,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது.

சீனியர் ஆராய்ச்சி ஃபெல்லோ – மாதம் ரூ.35,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது.

மாற்று திறனாளிகள் – மாதம் ரூ.35,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது.

கல்வித் தகுதி – மத்திய அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் PhD பயில வேண்டும்.

வயது தகுதி – 40 வயதிற்குள் இருக்கும் பெண்கள் இந்த திட்டத்தில் பயன்பெற முடியும்.

எஸ்சி/எஸ் டி/ஓ பி சி மற்றும் PWD பிரிவினருக்கு வயது தகுதி 45 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த அனைத்து தகுதிகள் இருக்கும் பெண்கள் “சாவித்திரிபாய் ஜோதிராவ் பூலே ஃபெல்லோஷிப்” திட்டத்திற்கு விண்ணப்பம் செய்யலாம்.