எதிர்க்கட்சியின் அமளியால் மீண்டும் நாடாளுமன்றம் முடக்கம்!!மாநில அவையில் பரபரப்பு!!

0
33
Parliament is suspended again because of the opposition party!! There is excitement in the state house!!
Parliament is suspended again because of the opposition party!! There is excitement in the state house!!

எதிர்க்கட்சியின்  அமளியால் மீண்டும் நாடாளுமன்றம் முடக்கம்!!மாநில அவையில் பரபரப்பு!!

ஜூலை 20 ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கி ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் அந்த கூட்டத் தொடரில் 17 அமர்வுகள், 23 நாட்கள் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் மணிப்பூர் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். மேலும் நம்பிக்கை இல்லா தீர்மானம் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளமாறு எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுப்பட்டர்கள். அதனை தொடர்ந்து மக்களவையில் கங்கிராஸ் அளித்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்றுக்கொண்டார்.

மேலும் அதன் மீது விவாதம் நடத்தபடும் என்றும் தெரிவித்திருந்தது. மேலும் சபாநாயகர்  நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்றுக் கொண்டதை எதிர்த்து ஆளுங்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்கள். இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு 26 கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்து.

தற்பொழுது 8 வது நாளாக இன்று மழைகால கூட்டத் தொடர் தொடங்கப்பட்டு விவாதங்கள் நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இதில் எதிர்கட்சிகள் மணிப்பூர் தொடர்பான கேள்வியை மீண்டும் எழுப்பி விவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் விவதாம் பெரிய அளவில் செல்வதால் இந்த அவையை பிற்பகல் 2 மணிக்கு ஒத்தி  வைப்பதாக அவை தலைவர்கள் தெரிவித்து உள்ளனர்.

மேலும் எதிர் காட்சிகள் அமைத்த நம்பிக்கையில்லா திர்மானம் மற்றும் 10 நாட்களில் பட்டியல் இடப்படும் என்று அமைச்சர் பிரஹாலத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

author avatar
Parthipan K