“பூண்டு தேநீர்” பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம்!! தெரிந்தால் ஆச்சர்யப்படுவீங்க!!

0
31
#image_title

“பூண்டு தேநீர்” பருகுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம்!! தெரிந்தால் ஆச்சர்யப்படுவீங்க!!

நாம் உணவில் அதிகம் சேர்க்கும் பூண்டில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கிறது.இதில் கால்சியம்,மெக்னீசியம்,மாங்கனீசு,துத்தநாகம்,நார்ச்சத்துக்கள்,வைட்டமின் பி 6 மற்றும் சி உள்ளிட்ட சத்துக்கள் அதிகளவில் அடங்கி இருக்கிறது.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க தினமும் பூண்டை உணவில் சேர்த்து கொள்வது நல்லது.
இந்த பூண்டு உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்க உதவுகிறது.பூண்டு பற்களை பச்சையாக சாப்பிட்டு வருவதன் மூலம் சளி,இருமல்,காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் நீங்கும்.

சரும ஆரோக்கியத்திற்கு பூண்டு பெரிதும் உதவுகிறது.முகத்தை பொலிவு பெற வைப்பதில் இதற்கு முக்கிய பங்கு இருக்கிறது.அதேபோல் இரத்த அழுத்தம்,செரிமான பிரச்சனை, சொத்தைப்பல் வலி உள்ளிட்ட பாதிப்புகளை சரி செய்ய பூண்டு பெரிதும் உதவுகிறது.

தேவையான பொருட்கள்:-

*பூண்டு – 3

*பனங்கற்கண்டு – தேவையான அளவு
அல்லது
தேன்

*டீ தூள் – 1/2 தேக்கரண்டி

செய்முறை:-

பூண்டு தேநீர் செய்வதற்கு முதலில் 3 பற்கள் பூண்டு தோல் நீக்கி எடுத்து கொள்ளவும்.பின்னர் அதை இடித்து கொள்ளவும்.

அடுப்பில் டீ போடும் பாத்திரம் வைத்து அதில் 1 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.பின்னர் இடித்து வைத்துள்ள பூண்டு பற்களை சேர்க்கவும்.அடுப்பை மிதமான தீயில் வைத்து கொள்ளவும்.

பின்னர் நீங்கள் உபயோகிக்கும் டீ தூள் 1/2 தேக்கரண்டி எடுத்து கொதிக்கும் பூண்டு நீரில் போடவும்.அவை நன்கு கொதித்து வந்த பிறகு அடுப்பை அணைக்கவும்.

இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி கொள்ளவும்.பின்னர் சுவைக்காக தேன் 1 தேக்கரண்டி சேர்த்து நன்கு கலக்கி பருகவும்.