அபராதம் அபராதம்! மக்களே உஷார்! தமிழக அரசின் அதிரடி உத்தரவு!

0
92
Penalty Penalty! People beware! Tamil Nadu government's action order!
Penalty Penalty! People beware! Tamil Nadu government's action order!

அபராதம் அபராதம்! மக்களே உஷார்! தமிழக அரசின் அதிரடி உத்தரவு!

கொரோனாவானது சீனாவிலிருந்து பரவி மக்கள் அனைவரையும் அதிக அளவு பாதித்தது.இதனைத்தொடர்ந்து சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என பாரபட்சம் பார்க்காமல் பல உயிர்களை காவு வாங்கியது.இதைக் கட்டுபடுத்தமுடியாமல் அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.வெளியூர்களிலிருந்து வருபவர்கள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வருபவர்கள் அனைவருக்கும் கொரொனோ தொற்று உறுதி செய்யப்பட்டு சில நாட்கள் தனிமை படுத்தப்பட்டு அதன்பின்னே அனுமதிக்கப்பட்டனர்.

மக்கள் தேவையின்றி வெளியே செல்லவும்  அனுமதிக்கப்படவில்லை.அத்தோடு பல கட்டுபாடுகளை வழிவகுத்தனர்.அதை கடைபிடிக்குமாறு வலியுறுத்தவும் செய்தனர்.இவ்வாறு கட்டுபாடுகளுடன் இருந்ததால் கொரோனா வின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.அதிக உயிர்களை காவு வாங்கிய கொரோனாவை மறந்து மக்கள் விதிமுறைகளை சரியாக பின்பற்றாமல் தற்போது கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளது.ஆகையால் மகராஷ்டிராவிலுள்ள நாக்பூரில் தற்போது ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக்கொன்டே வருவதால் ஊரடங்கு பற்றிய ஆலோசனைக்கூட்டம் நாளை நடைபெற உள்ளது.இதில் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியிலிருந்த படியே வானொலி காட்சி மூலம் அனைத்து மாநில முதலமைச்சர்களிடமும் பேச உள்ளார்.மக்கள் பின்பு போல் விதிமுறைகளை கடைபிடிகின்றார்களா எத்தனை பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது என்றெல்லாம் ஆலோசனையில் பேசயிருப்பதாக தகவல்கள் வந்துள்ன.அதனைத்தொடர்ந்து அதிக படியான மக்கள் வெளியே செல்லும் போது யாரும் முகக்கவசம் அணிவதில்லை.ஆகையால் தமிழக அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதில் தமிழக அரசு கூறியிருப்பது,

முகக்கவசம் அணியாமல் வெளியே செல்லும் மக்கள் அனைவரிடமும் அபராதம் வசூலிக்க வேண்டும்.அதனைத்தொடர்ந்து தொழிற்சாலைகளுக்கு கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு அதிகாரிகள் தினந்தோறும் பார்வையிட வேண்டும்.காய்ச்சல் முகாம்களை அதிகப்படுத்தி கொரோனா பாதிப்பு உள்ளவர்களை கண்டறிய வேண்டும்.தேர்தல் பிரச்சாரங்களில் மக்கள் கட்டயமாக முகக்கவசம் அணிந்திருப்பது மிகவும் அவசியமானதாகும்.அதே போல் நோய் தோற்று அதிகமாக உள்ள பகுதிகளில் கொரோனா தடுப்பூசி போட வலியுறுத்த வேண்டும்.

இந்த உத்தரவானது நாளை ஆலோசனைக் கூட்டத்தில் கூறுவதற்காக எடுக்கப்பட்டது போல உள்ளது என அனைவரும் பேசி வருகின்றனர்.இருப்பினும் மக்கள் விதிமுறைகளை கடைப்பிடித்து வெளியே செல்லும் போது பாதுகாப்பாக செல்லுங்கள்.