மக்களே உஷார்!! ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் உயிர்கொல்லிநோய் பாதிப்பு!! 

0
31
People beware!! The incidence of life-threatening diseases is increasing every year!!
People beware!! The incidence of life-threatening diseases is increasing every year!!

மக்களே உஷார்!! ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் உயிர்கொல்லிநோய் பாதிப்பு!! 

இந்தியாவில் ஆண்டுதோறும் புற்றுநோயின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன்படி இந்தியாவில் புற்றுநோய் உள்ள மாநிலமாக உத்திரபிரதேசம் உள்ளது.

மக்களவையில் கேள்வி நேரத்தில் ஒரு உறுப்பினர் இந்தியாவில் புற்று நோய் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு குறித்து கேள்வி எழுப்பினார்.  இந்த கேள்விக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை எழுத்துப்பூர்வமாக பதில் கூறியுள்ளது அதில்,

மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை, தேசிய சுகாதார இயக்கத்தின் ஒரு பகுதியாக, தொற்று அல்லாத நோய்களைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் தேசிய திட்டத்தின் கீழ் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளையும், மற்றும் நிதி உதவிகளையும் வழங்கி வருகிறது.  இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக புற்றுநோய் உள்ளது.மேலும் புற்றுநோய் தடுப்புக்கான உள்கட்டமைப்பு, மனிதவள மேம்பாடு, சுகாதார மேம்பாடு மற்றும் விழிப்புணர்வை உருவாக்குதல், ஆரம்பகால நோயறிதல் போன்ற கூறுகளில் இந்த திட்டமானது தனியாக கவனம் செலுத்தி வருகிறது. அடுத்ததாக புற்றுநோய் பாதிப்பின் காரணமாக  சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கும் நிதியுதவி அளிக்கப்படுகிறது.

சமீபத்திய ஒரு கணக்கெடுப்பின்படி நமது நாட்டில் கடந்த 2020-ஆம் ஆண்டு 13 லட்சத்து 92 ஆயிரத்து 179 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்ததாக கண்டறியப்பட்டது. இது அடுத்த ஆண்டே மேலும் அதிகரிக்க 2021-ஆம் ஆண்டு 14 லட்சத்து 26 ஆயிரத்து 447 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் 2022-ஆம் ஆண்டு 14 லட்சத்து 61,427 புற்றுநோய் தாக்கியவர்கள் உள்ளனர்.

இதையடுத்து புற்றுநோயினால் ஏற்படும் இறப்பு விகிதம் எடுத்துக்கொண்டால் 2020-ஆம் ஆண்டு 7 லட்சத்து 70 ஆயிரத்து 230 பேரும், 2021-ஆம் ஆண்டு 7 லட்சத்து 89 ஆயிரத்து 202 பேரும், 2022-ம் ஆண்டு 8 லட்சத்து 8 ஆயிரத்து 558 பேரும் இறந்துள்ளனர். இந்த ஆய்வில் புற்றுநோய் பாதிப்பு அதிகம் உள்ள மாநிலமாக உத்தரபிரதேசம் திகழ்ந்து வருகிறது. அங்கு கடந்த ஆண்டு 2 லட்சத்து 10 ஆயிரத்து 958 பேர் பாதிப்புக்கு ஆளாகினர்.இதேபோல் தமிழ்நாட்டில் 93 ஆயிரத்து 536 பேருக்கு பாதிப்பு உள்ளது.

இது கடந்த ஆண்டு நிலவரப்படி நாடு முழுவதும் மொத்தம் 14 லட்சத்து 61 ஆயிரத்து 427 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். புற்றுநோயால் ஏற்படும் இறப்பிலும் உத்தரபிரதேச மாநிலமே முதலிடத்தில் இருக்கிறது.  அங்கு இதன் பாதிப்பால் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 818 பேர் இறந்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் 50,841 பேர் இறந்தனர்.

என்று மத்திய அரசின் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.