நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை உள்ளவர்களா? காலையில் வெறும் வயிற்றில் இதனை குடிக்க வேண்டும்!

0
151

நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை உள்ளவர்களா? காலையில் வெறும் வயிற்றில் இதனை குடிக்க வேண்டும்!

நரம்பு மண்டல பாதிப்பு மற்றும் அடைப்பட்ட நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தையும் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சரி செய்து கொள்ள முடியும்.நரம்பு மண்டலமானது நம் ஐம்புலன்களின் செயல்பாடு ஆகும்.

சில காரணங்களால் கடுமையான நரம்பு மண்டல பாதிப்புகள் ஏற்படுகிறது. இதனை ஆரம்ப நிலையில் சரி செய்து கொண்டால் எவ்வித பாதிப்புகள் ஏற்படுத்தாது ஆனால் நம் இதனை சரியான நேரத்தில் சரி செய்து கொள்ளாமல் விடுவதன் காரணமாக நம் உடலில் பல்வேறு உறுப்புகளை பாதிப்படைய செய்து விடும். இதனை எளிமையான முறையில் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சரி செய்து கொள்ள முடியும் அதனைப் பற்றி இந்த பதிவு மூலமாக விரிவாக காணலாம்.

நரம்பு மண்டல பாதிப்புகளை சரி செய்யும் பண்புகள் கிராமில் அதிகப்படியாக நிறைந்துள்ளது. இதில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட் மன அழுத்தத்தை போக்கக்கூடியது மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தையும் சரி செய்யக்கூடியது இவை பார்க்கின்சன் எனும் நடக்குவாதத்தை குணப்படுத்த கூடியது.

லவங்கப்பட்டை இதில் உள்ள சத்துக்கள் மூளையில் பிராண வாயுக்களை அதிகரித்து நரம்பு மண்டலத்தை சீராக்க உதவுகிறது. மூளையில் ஏற்புடைய வீக்கத்தை குறைக்கும் தன்மையை கொண்டுள்ளது. இவை நரம்பில் உள்ள திசுக்களை செயலிழக்காதவாறு பாதுகாத்துக் கொள்கிறது.

வயதான காலங்களில் வரக்கூடிய ஞாபக மறதியை தடுக்க கூடியது. நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தும் சத்துக்கள் ஏலக்காயில் அதிகப்படியாக நிறைந்துள்ளது. ஏலக்காயில் சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ், புரதச்சத்து, பொட்டாசியம், சோடியம், இரும்புச்சத்து, விட்டமின் ஏ, சி இவை அனைத்தும் நிறைந்துள்ளது.

நம் உடலில் உள்ள பித்தத்தை வெளியேற்றி இதன் மூலமாக நரம்புத்தளர்ச்சி ஏற்படாதவாறு பாதுகாத்து கொள்கிறது மற்றும் நரம்புகளை வலுப்படுத்துவதற்கும் உதவுகிறது.

நான்கு கிராம்பு, இரண்டு லவங்கப்பட்டை ,நான்கு ஏலக்காய் ஆகிய மூன்றையும் நன்றாக காய வைத்து பொடி செய்து 300 எம் எல் நீரில் அரைத்து வைத்த பொடியினை சேர்த்து நன்றாக காய்ச்சி அதன் பிறகு வடிகட்டி வெறும் வயிற்றில் காலை நேரங்களில் பருகி வருவதன் காரணமாக நம் உடலில் உள்ள அனைத்து வகையான நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளையும் குணப்படுத்தி நரம்பு மண்டலத்தை வலுப்படுத்து உதவுகிறது.

author avatar
Parthipan K