பெரியகுளம் நகராட்சி பகுதிகளில் நகராட்சி நிர்வாக ஆணையர் திடீர் ஆய்வு!

0
107
Periyakulam Municipal Commissioner's sudden inspection of municipal areas!
Periyakulam Municipal Commissioner's sudden inspection of municipal areas!

பெரியகுளம் நகராட்சி பகுதிகளில் நகராட்சி நிர்வாக ஆணையர் திடீர் ஆய்வு!

தேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சியில், வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து நகராட்சிகளின் நிர்வாக ஆணையர் பொன்னையா ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வின் போது, பெரியகுளம் புது பேருந்து நிலையம் , பழைய பேருந்து நிலையம், குப்பையிலிருந்து உரம் தயாரிக்கும் உரக் கிடங்கு ஆகிய இடங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு நடத்தி பணிகளை விரைந்து நடத்துமாறு அறிவுறுத்தினார். முன்னதாக பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தில் பராமரிக்கப்படும் அலுவலக கோப்புகளை ஆய்வு செய்தார்.

நிகழ்வில் மதுரை மண்டல நிர்வாக இயக்குனர் சரவணன், மதுரை மண்டல செயற்பொறியாளர் மனோகரன், பெரியகுளம் நகராட்சி ஆணையாளர் புனிதன், நகராட்சி பொறியாளர் சண்முகவடிவு, பெரியகுளம் நகர் மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார், நகர் மன்ற உறுப்பினர்கள், நகர் மன்ற அதிமுக குழு தலைவர் ஓ.சண்முக சுந்தரம், ஆகியோர் கலந்து கொண்டனர். *அதிமுக கவுன்சிலர் கோரிக்கை:பெரியகுளம் நகராட்சி பகுதியில் ஆய்வு செய்வதற்காக வருகை புரிந்த நகராட்சிகளின் நிர்வாக ஆணையர் பொன்னையாவிடம், அதிமுக நகர் மன்ற குழு தலைவர் ஓ.சண்முக சுந்தரம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார்.

குறிப்பாக , பெரியகுளம் நகராட்சிக்குட்பட்ட புது பேருந்து நிலையத்திற்குள் அரசு பேருந்துகள் அனைத்தும் சென்று வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல், பொதுமக்கள் வசதிக்காக அரசு பணிமனையை பேருந்து நிலையமாகவும், பேருந்து நிலையத்தை அரசு பணிமனையாகவும் மாற்ற வேண்டும். பழைய பேருந்து நிலையத்தை ஆம்னி பேருந்து நிலையமாக மாற்ற வேண்டும். பாதாள சாக்கடை கழிவு நீர் குளம் குட்டைகளில் விடுவதை தவிர்க்க வேண்டும். வராக நதியில் கழிவு நீர் விடுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார். உடன், அதிமுக நகர் மன்ற உறுப்பினர்கள் இருந்தனர்.