பாட்டாளி மக்கள் கட்சி ok! இனி No பிஜேபி! அதிமுக அதிரடி!

0
108
Anbumani Ramadoss-News4 Tamil Online Tamil News Channel
Anbumani Ramadoss-News4 Tamil Online Tamil News Channel

நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் மாவட்டத்தில் தேர்தல் நிறுத்திவைக்க பட்டது. திமுக வேட்பாளர் வீட்டில் பணம் பட்டுவாடா செய்ய கட்டு கட்டாக பணம் இருந்ததை தேர்தல் அதிகாரிகள் கைப்பற்றினர். இதனால் வேலூர் மாவட்டத்தில் தேர்தல் நிறுத்தி வைப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதை தொடர்ந்து தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்த அனுமதி அளித்தது.

வேலூர் மாவட்டம் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சிகள் திமுக கூட்டணி கட்சிகள் மற்றும் நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் கட்சிகள் போட்டி இடுகின்றனர். அதிமுக உடன் பாமக, பிஜேபி, தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகள் கூட்டணியில் உள்ளது. வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள பகுதிகளில் பாஜகவினரை தேர்தல் பணியில் பயன்படுத்த அதிமுக தயங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.

வேலூரில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகம் தீவிரமாக தேர்தல் பணியாற்றிவருகிறார். புதிய நீதிக் கட்சியினரை மட்டுமல்லாமல் அதிமுகவினரும் தேர்தல் வேலையில் பிஸியாக உள்ளனர்.

ஏ.சி. சண்முகம் பிரசாரத்துக்கு செல்லும் இடங்களில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக, தேமுதிக கட்சிகளைச் சேர்ந்தவர்களும் முன்கூட்டியே அழைக்கப்பட்டுவிடுகிறார்கள். அந்தந்தப் பகுதிகளில் கூட்டணி கட்சியினரை அழைத்து அதிமுகவினர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், வேலூரில் அதிமுக – பாஜக கூட்டணியில் மட்டும் நல்ல புரிதல் இல்லாமல் போய்க்கொண்டிருப்பதாக வேலூரிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வேலூரில் இஸ்லாமியர்கள் அதிகம் என்பதால், அந்தப் பகுதிகளில் பாஜகவினரை தேர்தல் பிரசாரத்துக்கு அதிமுகவினர் அழைப்பதில்லை என்று கூறப்படுகிறது. மோடி எதிர்ப்பு தமிழகத்தில் இருப்பதால், பாஜகவினரை பயன்படுத்த அதிமுகவினர் ஆர்வம் காட்டவில்லை என்றும் கூறப்படுகிறது.

ஆனால், தேர்தல் பிரசாரத்தில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று வேட்பாளார் ஏ.சி. சண்முகம் விரும்புகிறார். அவருடைய விருப்பத்துக்கு மாறாக வேலூரில் பிரசாரத்துக்கு பாஜகவினரை அதிமுகவினர் கழற்றிவிடுவதால் ஏ.சி. சண்முகம் வருத்தத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த முறை நன்றாக தேர்தல் செலவு செய்தும் தேர்தல் ரத்தால் எல்லாம் வீணாகிவிட்டது என்ற வருத்தத்தில் இருந்தார் ஏ.சி. சண்முகம். இந்த முறை கூட்டணி கட்சிகளிடம் ஒருங்கிணைப்பு இல்லாமல் போய்விடக் கூடாது என்ற வருத்தத்தில் ஏ.சி. சண்முகம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க : திமுக அரசால் சாத்தியமில்லை என்ற திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசிற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கூறும் ஆலோசனை

பிஜேபி இஸ்லாமியர்களுக்கு எதிரான கட்சி என்பது போல பிம்பம் உருவாகி உள்ளதாக இஸ்லாமியர்கள் கருதுகின்றனர். ஆனால் பிஜேபி தரப்பில் இருந்து கூறுவது யாதெனில் பிஜேபி எந்த மதத்திற்கு எதிரான கட்சி அல்ல என கூறியுள்ளது. மக்களவையில் திரு அமித்ஷா அவர்கள் நாட்டிற்க்கு எதிராக செயல்படும் அனைவரையும் கட்டு படுத்த என். ஐ.ஏ அமைப்பை ஏற்படுத்த ஆதரவு கோரினார். இதற்கு திமுகவும் ஆதரவு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : அனுமதியில்லாமல் தடுப்பணை!ஆந்திராவை தமிழக அரசு எச்சரிக்க வேண்டும் என ராமதாஸ் அறிக்கை

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

author avatar
Parthipan K