புதுச்சேரியில் பள்ளி, கல்லூரி திறப்பு ஒத்திவைப்பு!! கல்வித்துறை அமைச்சர் திடீர் பேட்டி!!

0
79

நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் இழுத்து மூடப்பட்டன. அதே போல புதுச்சேரி மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகள்போன்ற கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன.

மேலும்,இதற்கு இடையில் புதுவையில் இரண்டாவது அலையில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்தது. இந்த நிலையில் ஏப்ரல் மாதம் முதல் ஊரடங்கானது பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கு அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தற்போது கொரோனா இரண்டாவது அலை குறைந்துள்ள காரணத்தால், மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் புதுவையில் 9 முதல் 11 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 16ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று
புதுச்சேரி முதல்வர் அறிவித்திருந்த நிலையில், புதுவையில் துணைநிலை ஆளுநர் தமிழிசையை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

அதனை அடுத்து, கொரோனா வைரஸ் தோற்று குறைந்த பிறகே பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என செய்தியாளர்களிடம் அறிவித்தார்.

மேலும், கொரோனா பரவல் இருக்கும் நிலையில், பெற்றோர் மற்றும் அரசியல் கட்சிகளின் கோரிக்கையினை ஏற்று பள்ளி திறப்பு தள்ளிவைக்கப்படுவதாக கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம் அவர்கள் கூறியுள்ளார்.

author avatar
Jayachithra