தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை !! வானிலை மையம் அறிவிப்பு !

0
53

அந்தமான் அருகியுள்ள வங்ககடலில் |நிலவிவரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக ராயலசீமா மற்றும் அதனை ஒட்டியு,ள்ள தெற்குக ஆந்திர கடலோர பகுதிகளில் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல் ,நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதியை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வாய்ப்பு இருப்பதாகவும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியசும் குறைந்த பட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியசும் சென்னையில் பதிவாக கூடும் என்ற ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள கடற்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால், அடுத்த 24 மணி நேரத்திற்கு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்வதால் அக்டோபர் 12 ஆம் தேதி முதல் வடக்கு ஆந்திர கடல் பகுதியை கடக்க கூடும் என்ற ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும் அக்டோபர் 10-ஆம் தேதி முதல் அக்டோபர் 15-ஆம் தேதி வரை குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா ஆகிய பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு சுமார் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று  கூறியுள்ளது. அக்டோபர் 9-ஆம் தேதி முதல் அக்டோபர் 13- ஆம் தேதி வரை அந்தமான் கடல் பகுதியில் சூறாவளி காற்றானது மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் கூறியுள்ளது.வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா ஆகிய பகுதிகளில் சூறாவளி காற்றின் வேகம் மணிக்கு சுமார் 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்தமான் மற்றும் மன்னர் வலைகுட ஆகிய பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதனால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று உச்சரிக்க படுகின்றனர்.

author avatar
Parthipan K