”இயக்குனராக முதல் படத்திலேயே மாதவன் நிரூபித்திருக்கிறார்…” ராக்கெட்ரி குறித்து ரஜினியின் கமெண்ட்

0
101

”இயக்குனராக முதல் படத்திலேயே மாதவன் நிரூபித்திருக்கிறார்…” ராக்கெட்ரி குறித்து ரஜினியின் கமெண்ட்

நடிகர் மாதவன் நடிப்பில் ஜூலை 1 ஆம் தேதி ராக்கெட்ரி திரைப்படம் ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை மையமாக வைத்து ராக்கெட்ரி என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார் நடிகர் மாதவன். இந்தப் படத்தை கதை, திரைக்கதை, வசனம் இயக்கம் என அனைத்தையும் ஏற்று நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மாதவனின் மனைவியாக நடித்துள்ள சிம்ரன்.

தமிழில் சூர்யாவும், இந்தியில் ஷாருக் கானும் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளனர். இவர்களைத் தவிர சிபிஐ அதிகாரியாக வரும் கார்த்திக் குமார், ஜெகன் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை எடுத்து முடித்து சில ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் கொரோனா மற்றும் பல காரணங்களால் படம் ரிலீஸ் ஆவது தாமதம் ஆகிவந்தது. இதையடுத்து பல திரைப்பட விழாக்களில் ரிலீஸான பின்னர் ஜுலை 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

வெளியானது முதல் ரசிகர்கள் மத்தியில் பரவலாகப் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இந்நிலையில் படத்தைப் பார்த்துள்ள ரஜினிகாந்த் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் “அனைவரும் கட்டாயம் பார்க்கவேண்டிய படம் குறிப்பாக இளைஞர்கள் பார்க்கவேண்டும். நம் நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி வளர்ச்சிக்காக பல துன்பங்களுக்கு ஆளாகி, தியாகங்கள் செய்து அரும்பாடு பட்ட நம்பி நாராயணன் வரலாற்றை மிக தத்ரூபமாக நடித்துப் படமாக்கி, இயக்குனராக தனது முதல் படத்திலேயே தலைசிறந்த இயக்குனராக தானும் நிரூபித்திருக்கிறார் மாதவன்” எனப் பாராட்டியுள்ளார்.