தொடர் கனமழை! இந்த மாவட்டத்தில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

0
87

பருவமழை தொடங்கியதிலிருந்து தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது இந்த பருவ மழையின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் விரிவாக பாதிப்பை சந்தித்து இருக்கின்றன. அதிலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த பருவமழை தன்னுடைய கோரத்தாண்டவத்தை ஆடி இருக்கிறது.

ஆகவே அந்த மாவட்டம் வெகுவாக இந்த பருவமழையின் காரணமாக, பாதிப்பை சந்தித்திருக்கிறது. இந்த நிலையில், அந்த மாவட்டத்திற்கு நேரில் சென்று முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு அந்த பகுதி மக்களுக்கு தேவையான அனைத்து விதமான உதவிகளையும் செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்.

இந்த நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது. மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு ஆந்திரா அதோடு வட தமிழக கடலோர பகுதிகளை ஒட்டி நிலவி வருகிறது.

எனவே இன்றும், நாளையும் வட தமிழகம் புதுச்சேரி காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு இடங்களிலும் தென் தமிழகத்தில் ஓரிரு பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

அதோடு வரும் 25 மற்றும் 26 உள்ளிட்ட தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் ஓரிரு பகுதிகளில் லேசான மழைப்பெய்வதற்க்கான வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது.

இந்த நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் அதிகாலை முதலே மழை நீடித்து வருகிறது. ஆகவே அந்த மாவட்டத்தில் இருக்கின்ற அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கி அந்த மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.